இந்தியாவை விட இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பலமான அணி – பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அதிரடி.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இதனிடைய இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் இன்னும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதை விட இந்தியாவிற்கு சமீப காலத்தில் நம்பர் 4வது இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலான மாற்று வீரர் இல்லாததும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாததும் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் ஹர்திக் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர். இதனால் இடது கை வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற சில இளம் வீரர்களை இந்தியா போன்ற தயார் செய்து வருகிறது.
மேலும் இந்தியாவின் மிடில் ஆர்டர் என்பது கொஞ்சம் மோசமாக இருப்பதாகவே இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களே கூறி வரும் நிலையில் தான் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி. அவர் கூறுகையில் “எங்களிடம் பாபர், ஃபகார், இமாம் மற்றும் ரிஸ்வான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். நடு வரிசையில் இஃப்திகார் மற்றும் சல்மான் அலி மற்றும் ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்ப்பார்கள்.
இந்தியாவை பாஸ்கிதான் அணியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அவர்களை விட எங்களிடம் சிறந்த மிடில் ஆர்டர் உள்ளது. இஷான் கிஷன் 5வது இடத்தில் விளையாடினால் விளையாடினால் சிறப்பாக விளையாட வேண்டும் என்று பிரதிக்க வேண்டியதுதான். அங்கு அப்படி அவர் செயல்படுவார் என்று தெரியவில்லை. இந்தியா திலக் வர்மாவை நம்பரில் 3லும் விராட் கோலியை நம்பர் 4ரிலும் விளையாட வைக்கலாம் விளையாடலாம்.
இந்தியா அணிக்கு 4, 5 மற்றும் 6 இடங்களில் சில பிரச்சனைகள் இருக்கிறது. ரோஹித், விராட், மற்றும் கில் ஆகிய மூன்று உயர்தர பேட்டர்களைக் கொண்டுள்ள இந்தியா அவர்கள் மூன்று பேரை சார்ந்திருக்கும். அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினம் என்றார் பாசித் அலி.