பந்து வீச்சு பற்றி நான் பேச விரும்பவில்லை. இரண்டாவது இன்னிங்க்ஸில் மிகவும் மோசமனாக பேட்டிங் செய்தனர் – ரோஹித் ஷர்மா வருத்தம்.

இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் மோசமான பௌலிங் காரணமாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 வடிவ போட்டியில் T20 போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அதில் தொடாரை

By ·

இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் மோசமான பௌலிங் காரணமாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 வடிவ போட்டியில் T20 போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அதில் தொடாரை கைப்பற்றி இருந்தது. இந்திய அணி இது வரை தென்னாபிரிக்காவிற்கு சென்று ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இது வரை 31 வருடங்கள் ஆகின்றது.

இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாற வைத்தனர். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 3 விக்கெட்டுகளையும் கோட்ஸி மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி இந்திய அணிக்கு 164 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். அதாவது 2வது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக எல்கர் 185 ரன்களும் ஜான்சன் 84 ரன்களும் பெண்டிகம் 56 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

அதன் பின் இன்றைய நாளில் 3வது இன்னிங்க்ஸ் விளையாடிய இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக கோலி 76 கில் 26 ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பர்கர் 4 விக்கெட்டுகளையும் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் ராபடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

எனவே தென்னாப்பிரிக்கா அணி 4வது இன்னிங்க்ஸ் விளையாடுவதற்கு முன்பே தோல்வியை தழுவியது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி நடக்கவுள்ளது அதில் வெற்றி பெற்று தொடரை சமன் படுத்துமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில் , நாங்கள் அடித்த ரன்கள் போதுமானதாக இல்லை. கே.எல்.ராகுல் அருமையாக பேட்டிங் செய்தார், ஆனால் நாங்கள் பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுக்க சிரமப்பட்டனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மோசமாக இருந்தது, விராட் அற்புதமாக பேட்டிங் செய்தார், ஆனால் நீங்கள் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்றால், அனைத்து வீரர்களும் ஒன்றிணைய வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டோம். நிலைமைகளிலிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் திட்டம் உள்ளது. நாங்கள் நாங்கள் நிலைமைகளுக்கு ஏற்றார் போல் ஒத்துப் போகவில்லை. நாங்கள் இரண்டு முறையும் நன்றாக பேட் செய்யவில்லை அதனால்தான் நாங்கள் இங்கே நிற்கிறோம்.

மூன்று நாட்களுக்குள் நீங்கள் விளையாட்டை முடிக்கும்போது நிறைய இல்லை. கே.எல் அவர் பேட்டிங் செய்த விதத்தில், அந்த மாதிரியான ஆடுகளத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டினார். பந்து வீச்சாளர்களை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை, அவர்கள் இங்கு அதிகம் விளையாடவில்லை. நாங்கள் மீண்டும் குழுவாகி மீண்டும் வருவோம். எங்களால் முடிந்தவரை விரைவாக மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவது முக்கியம், இது போன்ற இழப்புகளிலிருந்து கடினமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை