இவரை இந்த ஒரு போட்டியை வைத்து மட்டுமே கணக்கிட முடியாது – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் ஓபன் டாக்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான விளையாடி வெற்றியை பதிவு செய்தது. இதில் தன்னுடைய முதல் போட்டியை விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களை விளாசினார். ஆனால் எப்போதும் தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில் இந்த முறை 3 வதாக களமிறங்கி ம

By ·

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான விளையாடி வெற்றியை பதிவு செய்தது. இதில் தன்னுடைய முதல் போட்டியை விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களை விளாசினார். ஆனால் எப்போதும் தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில் இந்த முறை 3 வதாக களமிறங்கி மோசமாக ஆட்டமிழந்தார். இதனால் இவரின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரததோர் சுப்மன் கில் குறித்து பேசியுள்ளார்.

பயிற்சியாளர் கூறியது :

இந்த போட்டியில் மூன்று தொடக்க வீரர்கள் விளையாட வேண்டியதாக இருந்தது. எனவே யாராவது ஒருவர் 3வது இடத்தில் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் சரி என்று சுப்மன் தான் 3வதாக இறங்குவதாக கூறினார். மேலும் அவர் தொடக்க கிரிக்கெட்டிலும் பஞ்சாப் மற்றும் இந்தியா ‘ஏ’ அணிக்காக 3 அல்லது 4 இல் விளையாடினார் என்பதினால் அவரால் சரியாக அந்த இடத்தில் இறங்கினால் தனக்கு சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்.

எனவே ஒரு இன்னிங்கின் அடிப்படையில் அவரை ஒப்பிடுவது என்பது கூடாது. அவருக்கு இன்னமும் கிரிக்கெட்டில் நிறைய நேரம் இருக்கிறது. தேவைப்பட்டால் நேரத்தை ஒதுக்கி தன்னுடைய விளையாடும் நுட்பமும் குணத்தையும் மாற்றி செயல்படும் திறம் அவரிடம் இருக்கிறது. மேலும் ஒரு போட்டியில் அதிரடியாக ஆடவேண்டும் எனும் போது அவர் தாக்குதல் ஆட்டத்தையும் விளையாட முடியும்.

அவரினால் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் முடியும். அதுதான் நமக்கு 3 வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேணுக்கு தேவை படுகிறது எனவே இது அவருக்கு சாதகமாக இருக்கும். மேலும் பேசியு அவர் இந்தியா அணியின் கேப்டன் கேப்டன் ரோஹித்தின் சதம் குறித்து அவரினால் எப்படி டெஸ்ட் போட்டியை தன்னுடைய பேட்டிங்கினால் மாற்றமுடியும் என்பது குறித்தும் பேசினார்.

ரோஹித் ஷர்மா குறித்து.

அது குறித்து அவர் கூறுகையில் “ரோஹித் ஷர்மா கடந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சதம் அடித்தார். என்னை பொருத்தவரையில் அவரது பேட்டிங் பற்றி கவலை இல்லை. அவரினால் தேவைக்கேற்ப தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்பதை நாங்கள் பார்த்தோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இப்போது இங்கேயும் அவர் செய்ததை நாம் பார்த்தோம்.

நீங்கள் விளையாட்டிற்கு தகுந்தாற் போல செயல்பட விடும் அதே நேரத்தில் அதனை செய்வது என்பது வேறு. ஆனால் ரோஹித் ஷர்மாவினால் அதனை செய்ய முடியும் என்றார் பயிற்சியாளர். குறிப்பிடத்தக்க வகையில் ரோஹித் ஷர்மா வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சிறப்பாக விளையாடி சதம் அடித்தார், ஒரு பாட்னர்ஷிப் உருவாகி கொண்டிருக்கும் போது சரியான நேரத்தில் பந்துவீச்சாளரை மாற்றி விக்கெட்டும் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை