“மூளையில்லாத பேட்டிங்” இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்.

இன்னும் சில நாட்களின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்படி அந்த விறுவிறுப்புக்கு முன்பாக பல முடியமாக் போட்டிகள் நடிப்பெற இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ

By ·

இன்னும் சில நாட்களின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்படி அந்த விறுவிறுப்புக்கு முன்பாக பல முடியமாக் போட்டிகள் நடிப்பெற இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்கள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்திற்கும் இடையே வரலாற்று சிறப்பவுமிக்க ஆஷஸ் தொடரானது நடைபெற்று வருகிறது.

இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் தொடரானது தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக 2 வது போட்டியானது லார்ட் மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியக்கு தொடக்கத்தில் ஒரு விக்கெட் விழுந்தாலும் சிறப்பாக விளையாடிய வார்னர் 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதற்கு பிறகு வந்த அஸ்திரலியாவின் பேட்மேன்கள் இங்கிலாந்தின் பௌலர்களை பந்தாட ஆஸ்திரேலியா 417 ரன்களை அடித்தது. இதில் டிராவிஸ் ஹெட் 77 ரன்களும், ஸ்மித் 111 ரன்களையும் விளாசினார்கள்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தது ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீசல் ஆட்டமிழக்க மறுபுறம் பென் டக்கெட்ட 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்கில் 325 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணியில் பாஸ்பால் முறை பெரிய விமர்சனத்திற்கு உள்ளகியது.

ஏனென்றால் 5 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இங்கிலாந்து 279 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அதற்கு பிறகு அடுத்து 50 ரன்கள் எடுப்பதற்குலேயே 5 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை சந்தித்தது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் தான் இங்கிலாந்து அணியில் முன்னாள் லெஜண்டரி வீரரான “ஜெஃப்ரி பாய்காட்” தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

அதாவது ட்விட்டர் வாசி ஒருவர் பகிர்ந்திருந்த ஒரு பதிவை ரீட்விட் செய்த அவர் ஜெஃப்ரி பாய்காட் “மூலையில்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஆடியுள்ளனர் என்று தன்னுடைய விரக்தியை தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் இருந்தும் நல்ல வரவேற்பு வந்துள்ளது. இந்நிலையில் போட்டியை பொறுத்தவரையில் 2வது இன்னிங்கை ஆடிவரும் ஆஸ்திரேலிய 222 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 313 என்ற பலமான முன்னணியில் உள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை