உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்தியா அறிவித்தது பிசிசிஐ – யார் யார் தெரியுமா?

ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக WTC இறுதிப் போட்டிக்கு முன்னேற

By ·

ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக WTC இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா அணி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது , இதற்காக 15 பேர் கொண்ட அணியை பிபிசிஐ அறிவித்துள்ளது. அஜிங்க்யா ரஹானே 17  மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்திய அணியை பிசிசிஐ வீரர்களை அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் ஷர்மா இருப்பார் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது. அதே நேரத்தில், நீண்ட காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறிய பல வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி கொண்டு இப்போது காயத்துடன் இருக்கும் ரிஷப் பந்தும் , காயம் காரணமாக விலகிய ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் பும்ரா ஆகியோரின் பெயர்கள் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.மேலும் சூர்யா குமார் யாதவ் பெயரும் பட்டியலில் இல்லாததால் ரசிகர்கள் சற்று ஏமற்றதுடனே இருக்கிறார்கள்.

ரிஷப் பந்தின் இடத்தை நிரப்பும் வகையில் கே எஸ் பாரத் க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்த்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜிங்க்யா ரஹானேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.பிசிசிஐயால் அறிவிக்கப்பட்ட அணியில், மிகப்பெரிய மற்றும் முக்கியமான பெயர் அஜிங்க்யா ரஹானே. அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்டாலும், மோசமான ஆட்டம் காரணமாக அவர் டெஸ்ட்  கிரிக்கெட்டில் இருந்த இடத்தை இழந்தார், ஆனால் இப்போது சுமார் 17 மாத நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அஜிங்க்யா ரஹானே மீண்டும் இந்திய அணிக்காக  திரும்பியுள்ளார்.

WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் உணத்கட் .

வலை பயிற்ச்சி வீரர்களாக

உம்ரான் மாலிக், முகேஷ் குமார், குல்தீப் சென் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் வலை பயிற்சி வீரர்களாக செயல்படுவார்கள் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை