காயம் பட்ட வீரர்களை பற்றி பெரிய அப்டேட் கொடுத்த பிசிசிஐ – உற்ச்சாகத்தில் ரசிகர்கள்.
உலக கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்வது இந்தியா. ஏனென்றால் இந்திய அணியில் பல தலைசிறந்த வீரர்கள் வந்தது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். மேலும் கடந்த 20 வருடங்களில் இந்தியா உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த நாடாக இருந்த வந்தாலும் கடந்த 10
உலக கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்வது இந்தியா. ஏனென்றால் இந்திய அணியில் பல தலைசிறந்த வீரர்கள் வந்தது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். மேலும் கடந்த 20 வருடங்களில் இந்தியா உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த நாடாக இருந்த வந்தாலும் கடந்த 10 வருடமாக ஐசிசி நடத்தும் தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய அணியின் வீரர்களுக்கே புரியாத புதிராக இருந்து வருகிறது.
Medical Update: Team India (Senior Men)
— BCCI (@BCCI) July 21, 2023
For details click 👇👇https://t.co/fcjgc9OvTH #TeamIndia pic.twitter.com/cxmuylxWxN
மேலும் இது போதாதென்று வீரர்களுக்கு அவ்வவ்போது காயங்களும் ஏற்பட்டு விடுவதினால் இந்திய முக்கியமான நேரத்தில் சரியாக பந்துவீச்சாரகள் கிடைக்காமல் இந்தியா தடுமாறுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் கூற வேண்டும் என்றார் சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணியானது பெரும் தோல்வியை சந்தித்து. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஆர்க்கப்படுவது டெஸ்ட் விளையாடும் வீரர்களின் பற்றாக்குறை தான்.
ஏனென்றால் அந்த போட்டியில் கலந்து கொண்டிருக்க வேண்டிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தொடக்க வீரர் கே.எல் ராகுல், 3ஆம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என முக்கியமான வீரர்கள் இல்லாத காரணத்தினால் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் திணறியது நன்றாகவே தெரிந்தது. இந்நிலையில் காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வீரர்கள் தற்போது குணமாகி எப்படி இருக்கிறார் என்று பிசிசிஐ அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் :
தற்போது வலைப்பயிற்சியில் பேட்டிங்கை துவங்கியுள்ள அவர்கள் பலம் மற்றும் ஃபிட்னஸ் பயிற்சிகளை துவங்கியுள்ளனர். பிசிசிஐ மருத்துவ குழு அவர்களுடைய முன்னேற்றத்தில் திருப்தியடைந்துள்ளது. மேலும் வரும் நாட்களில் அவர்களின் வலிமை மற்றும் கண்டிஷனிங் ஆகியவற்றில் முன்னேறுவதற்கான வேலைகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா :
இந்த 2 வேகப்பந்து வீச்சாளர்களும் காயத்திலிருந்து குணமடையும் பகுதியின் கடைசி பாகத்தை தொட்டு வலைப்பயிற்சிகளில் முழுமூச்சுடன் விளையாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் பிசிசிஐ மருத்துவ குழுவினர் அவர்களை நேரில் கவனித்து இறுதி முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறியுள்ளது.
ரிஷப் பண்ட் :
ரிஷப் பண்ட் கார் விபத்து காரணமாக படுகாயம்அடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் அவர் பற்றியும் தகவல் வெளியிட்டுள்ளது ” ரிஷப் பண்ட் தன்னுடைய மறுவாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளார். அதன் காரணமாக மீண்டும் பேட்டிங் மற்றும் வலைப்பயிற்சியில் கீப்பிங் செய்வதையும் துவங்கியுள்ளார். மேலும் தற்போது அவர் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தையும் பின்பற்றுகிறார். அதில் வலிமை நெகிழ்வுத்தன்மை மற்றும் ஓட்டம் ஆகியவை அடங்கும் என்று கூறியுள்ளது.