புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி… அணிக்கு அதிரடி உத்தரவு – நடந்தது என்ன? விபரம் இதோ.

50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் துவங்குகிறது. உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17

By ·

50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் துவங்குகிறது. உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயத்தை சந்தித்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்னும் முழுமையாக ஃபிட்டாகாமல் கடந்த 3 மாதங்களுக்கு மேல் எவ்விதமான முதன்மையான போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் அவர்களை ஆசிய கோப்பையில் தேர்வு செய்துள்ளது நிறைய விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்த நிலைமையில் இலங்கையில் நடைபெறும் தங்களுடைய ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர்.

அதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் இந்திய வீரர்களின் ஃபிட்னெஸ் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. வேகமாக ஓடுவது, பளுவை தூக்குவது போன்ற பல்வேறு விதமான சோதனைகளை கொண்ட யோ-யோ டெஸ்ட் கிரிக்கெட்டில் இருப்பதிலேயே மிகவும் கடினமானதாக பார்க்கப்படுகிறது. அத்துடன் என்ன தான் நல்ல ஃபார்மில் இருந்து திறமையை கொண்டிருந்தாலும் இந்தியாவுக்கு விளையாட தேர்வாக வேண்டுமெனில் அந்த டெஸ்டில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட யோ யோ டெஸ்டில் நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி இன்று கலந்து கொண்டு தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்துள்ளார். அந்த தேர்வில் அனைத்து விதமான சோதனைகளையும் கடந்த விராட் கோலி 17.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. ” பயமுறுத்தும் சங்குகளுக்கு இடையே யோ யோ சோதனையை முடித்த மகிழ்ச்சி. 17.2 முடிந்தது” என்று கூறியுள்ளார். ஆனால் இதில் தான் பிரச்னையா வந்துள்ளது.

அதாவது கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தின் படி தாங்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிடலாம் ஆனால். ஆனால் யோயோ போன்ற உடல் தகுதி தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் என்று வெளியே சொல்லக்கூடாது என்று பிசிசிஐ கூறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தை மீறி இனி யாரும் வெளியே கூறக்கூடாது என்று பிசிசிஐ வாய்மொழியாக உத்தரவை இட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் ” அணியில் உள்ள வீரர்கள் சோசியல் மீடியா பக்கங்களில் எந்த ஒரு ரகசியமான தகவலை வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், பயிற்சியில் இருக்கும் படங்களை பதிவிடலாம் என்றும் அதே நேரத்தில் அதில் தங்கள் எடுக்கும் மதிப்பெண்களை வெளியிடக்கூடாது என்றும் அப்படி செய்தால் ஒப்பந்தத்தை மீறும் படியாக ஆகிவிடும் என்றும் ஒரு பிசிசிஐ அதிகாரி கூறியதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை