இந்திய அணிக்கு புதிய தேர்வு குழு தலைவர் – 2007 சாம்பியன் வீரர் என வெளியான தகவல்.
இந்திய அணி சமீப காலமாக மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா வென்ற சாம்பியன் ட்ராபிக்கு பிறகு இந்திய அணியால் ஒரு ஐசிசி போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த நிலைமை உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்
இந்திய அணி சமீப காலமாக மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா வென்ற சாம்பியன் ட்ராபிக்கு பிறகு இந்திய அணியால் ஒரு ஐசிசி போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த நிலைமை உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா உலக சாம்பியன் ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.
இருந்த போதிலும் இந்திய அணிக்கும் ஐசிசி கோப்பயை வெல்ல இந்த வருடம் மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது வரும் ஆக்டோபர் மாதம் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டியிலாவது இந்தியா வெற்றியடையுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனிடையே இந்திய ஆண்கள் அணியின் தேர்வு குழுவில் 1 இடம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டிங் ஆபிரேஷன் காரணமாக விலகிய சேத்தன் சர்மா காரணமாக அந்த இடம் காலியாக இருக்கிறது.
பொதுவாக இந்திய தேர்வு குழுவில் 5 பேர் உறுப்பினர்களா இருப்பார்கள் ஆனால் சேத்தன் சர்மா பதவி விலகியதால் இடைக்கால தலைவராக தேர்வு குழுவின் உறுப்பினர்கள் நிர்வகித்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் உலக கோப்பை நெருங்ககுவதால் புதிய தேர்வு குழு தலைவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்துளளது. அதற்கு அறிக்கை வெளியான நிலையில் அதற்கு இந்திய அணியில் முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர் இந்த பதவிக்கு விண்ணப்பித்துளார்.
மேலும் இந்திய அணியின் தேர்வு குழு தலைவருக்கு விண்ணப்பித்தவர்களில் அஜித் அகர்கர் முதன்மையான வீரர் என்பதினால் அவருக்கே இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை அணியை சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிளில் விளையாடி உள்ளார். அதுமட்டுமலாம்ல கடந்த 2007ல் இந்தியா வென்ற போது அந்த அணியிலும் இருந்துள்ளார்.
முன்னணி வீரர்கள் விண்ணப்பிக்காத காரணம் :
ஆனால் பல முன்னாள் வீரர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் விண்ணப்பிக்காததற்கு காரணமாக கருதப்படுவது இந்த வேலைக்கும் தரப்படும் சம்பளம் மற்றும் இது இந்தியாவின் கிரிக்கெட்டின் முக்கிய பொறுப்பு என்பதினால் வேறு எந்த பொறுப்பிலும் இருக்க கூடாது என்பதினாலும் தான் என்று கூறப்படுகிறது. இதனால் இதற்கு பதிலாக பலர் வர்ணனையாளர்களாகவும், நேரலையில் பேசுவதன் மூலம் அதிகம் சம்பாரிக்கின்றனர் என்று பிசிசிஐ சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தேர்வு குழு தலைவருக்கு வருடாந்திட சம்பளத்தில் திருத்தும் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.