இவங்க இரண்டு பெரும் பிட்டாக இருந்தும் டெஸ்ட் தொடரை விளையாடவில்லை அதற்க்கு தான் இந்த விளைவு – BCCI அதிகாரி வெளிப்படையான பேச்சு.

நேற்றிலிருந்து இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெய

By ·

நேற்றிலிருந்து இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தது.

அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது.

ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார். இஷான் கிஷன் இடைவேளையின் போது பரோடாவில் ஐபிஎல் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் பயிற்சி பெறுவதற்கான கிஷானின் முடிவிற்கு அதிருப்தியை வெளிப்படுத்தினர் மற்றும் மும்பை போட்டியில் விளையாடாமல் இருக்கும் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முகாமில் ஐயர் ஈடுபட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஐயர் இப்போது மும்பையின் ரஞ்சி கோப்பை அரையிறுதிச் சந்திப்பிற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். மற்ற ஈடுபாடுகளை விட வீரர்கள் தேசிய மற்றும் உள்நாட்டு பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் வகையில், தேர்வாளர்கள் இந்த நடவடிக்கைகளைக் கண்டறிந்தனர். இது குறித்து BCCI அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வுக்குழுவினர் அவர்களின் திறமையை சந்தேகிக்கவில்லை.

ஆனால், நீங்கள் உடல் தகுதி உடையவர் என்று என்சிஏ கூறியும், டெஸ்ட் தொடருக்கு உங்களைக் கிடைக்கச் செய்யவில்லை என்றால், பிசிசிஐ உங்களுக்கு எப்படி ஒப்பந்தத்தை வழங்க முடியும்? ஐபிஎல்லுக்குப் பிறகு, அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விகிதாச்சார ஒப்பந்தத்திற்குத் தேவையான போட்டிகளின் எண்ணிக்கையின் அளவுகோல்களை நிறைவேற்றினால், அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும், ”என்று BCCI அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை