ஹர்திக் பாண்டியாவின் காயம் எப்படி? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்.
உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பை
உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு 4வது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இந்நிலையில் 9வது ஓவரின் போது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சினார். அதன் போது 3வது பந்தில் பங்களாதேஷ் வீரர் நேராக அடிக்க அதனை தடுக்க முயற்சி செய்த பாண்டியா கால் தடுமாறியது. இதனால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது போல தெரிந்தது.
இந்நிலையில் போட்டி முடிந்ததும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “பாண்டியாக்கு சற்று வலி இருக்கிறது. பெரிய சேதம் எதுவும் இல்லை, அது நமக்கு நல்லது. ஆனால் அது போன்ற ஒரு காயத்துடன், நாம் ஒவ்வொரு நாளும் மதிப்பீடு செய்ய வேண்டும், அவருக்கு தேவையானதை செய்யப்படும் என்று கூறினார். மேலும் பிசிசிஐயும் அதிகாரப்பூர்வ தகவலை அப்போதே கொடுத்திருந்தது. அதாவது பாண்டியாவிற்கு ஸ்கேன் எடுக்கப்படும் என்று. இதனால் காயம் எப்படி இருக்கிறது எண்டுற ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் கிடைத்த தகவலின் படி காயமடைந்த ஹர்திக் பாண்டியனை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொல்லியிருப்பதாகவும் , அதுவரையில் அவர் பிசிசிஐ மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், 22ஆம் இமாச்சல் பிரதேசத்தில் நடக்கும் நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ள மாற்றார் என்றும், அதற்கு அடுத்து வரும் 29 ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிராக நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் சொல்வதை வைத்து பார்க்கையில் ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுக்க 10 நாட்கள் கிடக்கிறது. மேலும் ரோஹித் சர்மாவும் அவருக்கு பெரிய காயம் இல்லை என்று கூறியிருந்தார். இதனால் நமக்கு கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு வந்தாலும் மருத்துவர்களின் முடிவே இறுதியானது என்பதினால் அடுத்த அப்டேட் வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்.