ஐபிஎல்லை மட்டுமே வைத்து உலக கோப்பைக்கு தேர்வு செய்ய மாட்டோம்.. இதுவும் தேவை – இந்திய அணி குறித்து ஜெய் ஷா பேட்டி.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இதனை கருத்தில் கொண்டு இந்தியா பலமான ஒரு அணியையும் தயார் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியில் அற்புதமாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துவே இந்த உலக கோப்பை தொடரில் தேர்வாகிய நிலையில் உலக கோப்பையில் விளையாடும் அணியின் தேர்வு குறித்து பேசியுள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
அவர் கூறுகையில் : வெளிநாட்டு அனுபவமும் அவசியம் என்பதால், ஐபிஎல் செயல்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தேர்வாளர்கள் தேர்வு செய்ய முடியாது. கடந்த ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023 இல் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் இறுதி வெற்றி எங்களைத் தவிர்த்துவிட்டது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கோப்பையை வீட்டிற்கு கொண்டு வருவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
மேலும் பேசிய அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் கடுமையான போட்டியாளர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் புரவலர்களான வெஸ்ட் இண்டீஸ் இருக்கும் என்றும். ஏனெனில் அவர்கள் டி20யில் சிறப்பாக உள்ளனர் என்றும் கூறினார். மேலும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து பலர் தங்களது கருத்துக்களை கூறிய நிலையில் அந்த விதி குறித்து பேசியுளார் ஜெய் ஷா.
அவர் கூறியதாவது : நாங்கள் வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்தாலோசிக்கிறோம். போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாகி வருவதை நான் உணர்கிறேன், மேலும் இந்திய வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. எங்கள் ஆலோசனைகள் அதிருப்தியை வெளிப்படுத்தினால், நாங்கள் அதை மாற்றுவோம் என்றார் ஜெய் ஷா.
டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :
ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்