“நெதர்லாந்து அணியே அங்கேயே விக்கெட்டுகளை எடுத்து இருக்கணும். விட்டது தான் தவறு” – பாவுமா

நாங்க அப்போவே அதை செய்திருக்க வேண்டும் தென்னபிரிக்கா அணியின் கேப்டன். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவ

By ·

நாங்க அப்போவே அதை செய்திருக்க வேண்டும் தென்னபிரிக்கா அணியின் கேப்டன். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர். இரண்டு வெற்றியில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.

நேற்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியது. மழையின் காரணமாக போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது அணியில் அதிகபட்ச எட்வர்ட்ஸ் 78 ரன்களும் வான் டெர் மெர்வே 29 ரன்களும் ஆரியன் தட் 23 ரன்களையும் குவித்தனர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி வந்தாலும் அதன் பின்பு தன்னுடைய விளையாட்டை சிறப்பாக மாற்றினார்கள்.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் அவ்வப்போது ரன்களை விட்டுக் கொடுத்தும் 31 எக்ஸ்ட்ரா ரன்களை விட்டுக் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கு இங்கிடி மற்றும் ஜான்சன் ராபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கேச மகாராஜ் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி தலா ஒரு விக்கெட்டைகளையும் விழித்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் கடைசியில் சுமாராக தான் இருந்தது.

43 ஓவர்களில் 246 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் இருந்தாலும் போகப்போக அந்த தொடக்கத்தை அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்ச ரன்களாக டேவிட் மில்லர் 43 ரன்களும் க்ளாசண் 28 ரன்களும் கோட்சி 22 ரன்கள் மட்டுமே அடித்தனர். 42.5 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து உங்களை 207 மட்டுமே அடிக்க முடிந்தது.

நெதர்லாந்து அணியில் பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை கட்டி போட்டனர்.லோகன் வான் பீக் 3 விக்கெட்டும் ரோலோஃப் வான் டெர் மெர்வே,பால் வான் மீகெரென், தலா இரண்டு விக்கெட்களையும் ஆங்கர்மெண் ஒரு விக்கெட்டை வீழ்த்தி நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்த உலகக்கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாவுமா கூறியது:

6 விக்கெட்டுக்கு 112 ரன்களில் இருந்து அப்போதே அவர்களின் விக்கெட்டுகளை எடுத்து இருக்க வேண்டும். அவர்களை 200 ரன்களுக்கு மேல் செல்ல அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் சேசிங்கில் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் எங்கள் பேட்டிங்கில் சில குறைபாடுகளை அவர்களால் எங்களை வெளியேற்ற முடிந்தது. நாம் எக்ஸ்ட்ரா ரன்களை கட்டுப்படுத்தியிருக்கலாம். பீல்டிங் தரமானதாக இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் கொண்டிருந்த அதே தரநிலை அல்ல. நெதர்லாந்து அணி சிறப்பாக செயல் பட்டது. அவர்கள் எங்களை முழுவதும் அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.”

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை