இன்ஸ்டாவில் செய்துள்ள புதிய மாற்றம் – வெளியேறுவதை சூசகமாக சொல்கிறாரா புவனேஸ்வர் குமார்?

பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் விளையாடும் 11 பேர் அணியில் சேர்வது என்பது மிகவும் கடுமையான ஒரு காரியம். சொல்லப்போனால் அது பலருக்கும் சவாலாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரராக இருந்தாலும் காயம் காரணமாக வெளியேறினாலும் பின்னர் மீண்டும் இந்திய

By ·

பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் விளையாடும் 11 பேர் அணியில் சேர்வது என்பது மிகவும் கடுமையான ஒரு காரியம். சொல்லப்போனால் அது பலருக்கும் சவாலாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரராக இருந்தாலும் காயம் காரணமாக வெளியேறினாலும் பின்னர் மீண்டும் இந்திய அணியில் மீண்டும் இடத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம்.

கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை அதிரடியாக நீக்கி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஒருவர் புவனேஷ்வர் குமார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை தொடர்களில் முதன்மை பவுலராக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். மேலும் ஐபிஎல் தொடரிலும் குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை தட்டி பார்த்தார்.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் காயத்தை சந்தித்து தடுமாறிய அவர் டெஸ்ட் அணியில் வாய்ப்பிழந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுமாற்றமாக செயல்பட்டார். அதே போலவே 2021 டி20 உலக கோப்பையிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் அப்போதிலிருந்தே நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார். மேலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டார்.

இந்நிலையில் பும்ரா மற்றும் சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையான அவர்கள் புவனேஷ்வர் குமார் இடத்தை பிடித்து விட்டனர் என்றே கூறலாம். அதன் காரணமாக கடைசியாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடியிருந்த அவர் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் 2023 ஐபிஎல் தொடரிலும் 14 போட்டிகளில் வெறும் 16 விக்கெட்டுகளை 8.33 என்ற எக்கனாமியில் எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலே செயல்பட்ட அவரை தற்போது உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாததால் 2023 உலகக் கோப்பையிலும் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் யோசிக்கின்றனர். அத்துடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்க நினைக்கும் இந்திய அணி நிர்வாகமும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க யோசித்து வருகிறது.

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இந்திய கிரிக்கெட் வீரர்” என்று தான் வைத்திருந்த தன்னுடைய அடையாளத்தை தற்போது வெறும் “இந்தியன்” என்று புவனேஸ்வர் குமார் மாற்றியுள்ளார். குறிப்பாக கடந்த வாரம் ரிங்கு சிங்குவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர் என்றே குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளகி உள்ளனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை