எல்லாம் முடிந்தது… நான் இனி இந்திய அணிக்கு வருவது சந்தேகம் தான் – நட்சத்திர வீரர் அதிரடி அறிவிப்பு.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிக்கும் உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்தியா நேற்று உலக கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இது இடம்பெற மாட்டார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஷ்வர் குமார் கணித்து போலவே இடம்ப
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிக்கும் உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்தியா நேற்று உலக கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இது இடம்பெற மாட்டார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஷ்வர் குமார் கணித்து போலவே இடம்பெற வில்லை. சொல்லப்போனால் பல மாதங்களாக புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் விளையாடவில்லை.
ஒரு காலத்தில் அதிரடியா யாக்கர்களை வீசி விக்கெட்டுகளை எடுக்கும் புவனேஷ்வர் குமார் இந்தியாவின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை அதிரடியாக நீக்கி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஒருவர் புவனேஷ்வர் குமார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை தொடர்களில் முதன்மை பவுலராக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்.
மேலும் ஐபிஎல் தொடரிலும் குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை தட்டி பார்த்தார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் காயத்தை சந்தித்து தடுமாறிய அவர் டெஸ்ட் அணியில் வாய்ப்பிழந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுமாற்றமாக செயல்பட்டார். அதே போலவே 2021 டி20 உலக கோப்பையிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் அப்போதிலிருந்தே நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார்.
மேலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டார். இந்நிலையில் பும்ரா மற்றும் சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையான அவர்கள் புவனேஷ்வர் குமார் இடத்தை பிடித்து விட்டனர் என்றே கூறலாம். மேலும் வரும் உலக கோப்பை தொடரிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் புவனேஷ்வர்குமாரின் சர்வதேச கிரிக்கெட் வழக்கை கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே சொல்ல்லாம்.
இந்த நிலையில் தான் புவனேஷ்வர் குமார் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வழக்கை குடித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ஒரு வேகப்பந்து வீச்சாளராக நீங்கள் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாடப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்த ஒரு கட்டத்தில் நீங்கள் இருக்கும்போது. அது உங்களைத் தாக்கும் போது நீங்கள் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறீர்கள். நான் இப்போது அந்த நிலையில் இருக்கிறேன்.
ஆம், நான் இந்திய அணியின் அங்கம் இல்லை, ஆனால் இது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. மேலும் நான் வேறு அந்த முயற்சியும் செய்யவில்லை அல்லது திரும்பி வருவதற்கு புதிதாக எதையும் திட்டமிடுகிறேன் என்பதற்காக அல்ல. நான் கிரிக்கெட் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
நான் திரும்பி வருவதற்காக மட்டும் விளையாடவில்லை. நன்றாக கிரிக்கெட் விளையாட தேவையானதை செய்து வருகிறேன். மீண்டும் இந்திய அணிக்கு வர வாய்ப்பு இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் அதுவல்ல. நான் எந்த வடிவத்தில் அல்லது லீக்கில் விளையாடினாலும், அதில் எங்கினுடைய பங்கை அளிக்க விரும்புகிறேன். விஷயங்கள் சரியாக நடந்தால், நான் மீண்டும் திரும்ப முடியும், ஆனால் அது இப்போது எனது ஒரே கவனம் அல்ல. என்று கூறினார் புவனேஷ்வர்.