இவங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு நேரம் கிடையாது. இன்னும் ஒரு நாக் மட்டும் தான் இருக்கு – ஆகாஷ் சோப்ரா

இவர்கள் இருவரும் தங்களது நேரத்தை வீண் அடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று முன்னால் வீரர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில

By ·

இவர்கள் இருவரும் தங்களது நேரத்தை வீண் அடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று முன்னால் வீரர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்திருந்தது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் சிறப்பாகவே விளையாடி கொண்டு இருந்தது. ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இந்திய அணி ஏமாற்றத்தை அளித்திருந்தார். அதன் பின்வந்த சுப்மான் கில் 34 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி தனக்கு அளிக்கப்படும் வாய்ப்பை இழந்து கொண்டே வருகிறார். அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்கள் இரண்டு பேர் மீதும் சமிபத்தில் சில குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளது இந்த இரண்டு வீரர்களையும் நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று பலர் கருத்துகளை கூறி வந்தனர். ஆனால் இந்த போட்டியில் விராட்கோலிஜடேஜா கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத காரணத்தினால் மட்டுமே இந்த இரண்டு வீரர்களும் இந்த போட்டியில் விளையாடி உள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களை நிருப்பிக்க தவறிவிட்டனர்.

இறுதியில் இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 336 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜெயஸ்வால் 179 ரன்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சாளர் அகமது மற்றும் பஷிர் தலா ஹார்ட்லி மற்றும் அண்டர்சன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இன்றைய நாளில் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை வீணாக்கி கொண்டே இருந்து வருகிறார்கள். இவர்களது ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,

“கில்லுக்கும் ஐயருக்கும் நேரம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் ஒரு நாக் இருக்கிறது, அவர்கள் ரன்களை அடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் அவர்களின் அடுத்த நாக்‌கள் சரியாக அமையவில்லை என்றால், இருவருக்கும் பிரச்சனைகள் பாரதூரமாகிவிடும். ஒரு ஆரம்பம். தொடக்கத்தில் சற்று ஆக்ரோஷமாக விளையாடிய அவர், அதன்பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனின் இரண்டு ஓவர்களில் மூன்று எட்ஜ்களைப் பெற்றார். மூன்றாவது எட்ஜ் கீப்பருக்கும் கொண்டு செல்லப்பட்டு அவர் வெளியேறினார்.

அவர் ஒரு நல்ல தொடக்கத்தை வீணடித்தார். 34 ரன்கள் போதாது. ஸ்ரேயாஸ் ஐயரும் ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவன் விளையாடும் விதம் நம்பிக்கை தரவில்லை. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நீங்கள் அப்படி அலைய மாட்டீர்கள். ஷார்ட் பந்துகளில் அதிக வேகம் இல்லாவிட்டாலும் அவர் நிறைய நகர்ந்தார், இறுதியில் அவர் வெளியேறினார். பந்து கொஞ்சம் குறைவாகவே இருந்தது என்றும் அவர் சற்று துரதிர்ஷ்டவசமாக இருந்தார் என்றும் நீங்கள் கூறலாம், ஆனால் அவர் கிரீஸில் நிலையாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை