இவங்க ரெண்டுபேரும் T20 உலகக்கோப்பையில் கட்டாயம் இடம்பெற வேண்டும் – முன்னாள் இந்திய வீரர் அதிரடி.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. அதற்க்கு இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்து இருந்தார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விறாட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா கட்டயாம் அணியில் உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
கடந்த 1.5 ஆண்டுகளாக கோலியின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. அவர் 2023 உலகக் கோப்பையில் நம்பமுடியாத அளவிற்கு விளையாடினார், 3 சதங்களுடன் 750 ரன்கள் எடுத்தார். எனவே அவரது வரையறுக்கப்பட்ட ஓவர்கள் பேட்டிங் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் என்னை நன்றாக உணர வைப்பது அவர்களின் பீல்டிங் திறன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இன்னும் சிறந்த பீல்டர்கள் மற்றும் களத்தில் பெரும் உதவியாக இருப்பார்கள்.
2007 டி20 உலகக் கோப்பையில் நான் இருந்தேன், அது மிகவும் பரபரப்பான காலங்களில் ஒன்றாகும். எம்எஸ் தோனியும், இர்பான் பதானும் களத்தில் விளையாடி இந்தியாவுக்காக வெற்றி பெற்றதை நான் பார்த்திருக்கிறேன். தெளிவாக, அங்கிருந்து, டி20க்கான மோகம் இந்தியாவில் பெருகியது. அதற்கு முன், இந்த வடிவமைப்பை யாரும் நன்கு அறிந்திருக்கவில்லை. இந்தியாவின் அந்த வெற்றி, ஐபிஎல்-லும் இந்தியாவில் தொடங்குவதற்கு உதவியது” என்று கவாஸ்கர் கூறினார்.