ஒரே நாள் முடிவில் இரண்டு அணிகளும் மாறி மாறி செய்து கொண்ட மோசமான சாதனைகள். சாதனை பட்டியல் இதோ!
முதல் நாள் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிர
முதல் நாள் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது. அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது.
இருப்பினும் அதனை ஈடுகட்டும் வகையில் நேற்று இந்திய அணி செயல்பட்டு இருந்தது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதில் முதல் நாளில் இன்று தொடக்கத்தில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் செஷன் முடிவடைவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஏடன் மார்க்கம் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற எல்கர் 4 ரன்கள் ஏறினார். தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை யாரும் சிறப்பாக விளையாடவில்லை என்று சொல்லலாம். எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாடாமல் அந்த வேகத்திலேயே சென்று கொண்டிருந்தனர். அதன் பிற்கு பிறகு ஸ்டெப் மூன்று ரன்களிலும் ஜார்ஜ் இரண்டு ரங்களிலும் பெடிகம் 12 ரன்கள் இன்னும் ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக வெர்ரின்னே 15 ரன்களையும் பெடிகம் 12 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். இதில் சிராஜ் ஒன்பது அவர்கள் வீசிய ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணியின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை அவர் சுருட்டி இருந்தார் அதன் பின் பும்ரா இரண்டு விக்கெட்களையும் முகேஷ் குமார் இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தி இருந்தனர்.
எனவே தென் ஆப்பிரிக்கா அணி முதல் செஷன் முடிவடைவதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து முன்னிலையில் அதனை பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்களும் ரோஹித் ஷர்மா 39 ரன்களும் ஷுப்மன் கில் 36 ரன்களும் கே.எல்.ராகுல் 8 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ரன் ஏதும் எடுக்காமல் 0 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் மூலம் இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர் வெளியே தெரிந்துள்ளது.தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபாடா இங்கிடி மற்றும் பர்கர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அதன் பின் தென்னாப்பிரிக்கா அணி 62-3 என்ற நிலையில் முதல் நாளை முடிவடைந்தது.
முறியடிக்கப்பட்ட மோசமான சாதனைகள்:
1) டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் அடித்த குறைந்தபட்ச ரன்கள்
2) தென்னாப்பிரிக்கா அணி 55 டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அடித்த குறைந்த ரன்கள் இது தான்.
3) தென்னாப்பிரிக்காவில் ஒரு நாளில் அதிக விக்கெட்டுகள் (23)
4) 0 ரன்களில் 6 விக்கெட்டுகள்.
5) வரலாற்றில் முதல் முறையாக 0 ரன்களில் 6 விக்கெட்டுகள்
6) முதல் முறையாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 7 முறை 0 ரன்
7) ஒரு இன்னிங்க்சில் அதிக முறை டக் அவுட்