பாஸ்பால் முறையில் தான் தொடர்ந்து ஆடப்போகிறோம் – பிரெண்டன் மெக்கல்லம் அதிரடி.

உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம். இவர் விளையாடிய காலத்தில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் பெயர் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் முதல் சதம் அடித்த வீரரும் இவர் தான். அதுவும் முதல் ஐபிஎல

By ·

உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம். இவர் விளையாடிய காலத்தில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் பெயர் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் முதல் சதம் அடித்த வீரரும் இவர் தான். அதுவும் முதல் ஐபிஎல் போட்டியில். இவர் தற்போது அணைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இங்கிலாந்து அணியின் முந்தய கேப்டனான அதிரடி வீரர் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சில மோசமான தோல்விகளை தழுவியதை அடுத்து பென் ஸ்டோக்ஸ் கேப்டானாகவும், பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் பயிச்சியாளராகவும் பொறுப்பேற்றனர். இவர்களது தலைமையில் இங்கிலாந்து அணி சில சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியது. அதிலும் அதிரடியாக ஆடும் முறையை பிரெண்டன் மெக்கல்லம் உருவாக்கி அதற்கு பேஷ்பால் என்று பெயர்வைத்தார்.

இந்த முறையில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பாட்டால் நாளடைவில் சில தோல்விகளையும் தழுவியது. குறிப்பாக தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக தொடக்கத்தில் விளையாடி பாய்ந்தனர் வெற்றியின் நுனியில் வந்தது தோல்வியடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் பேஷ்பால் முறை குறித்து பலவிதமான கேள்விகள் ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியிலும் எழுந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் பிரண்டன் மெக்கல்லம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

பிரெண்டன் மெக்கல்லம் கூறியது :

அதில் “எங்களுடைய வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன். சில விஷியங்கள் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. ஆனால் அதுதான் கிரிக்கெட். கடந்த 5 நாட்கள் நாங்கள் விளையாடிய விதம் குறித்து பல விதமான விமர்சங்கள் எழுந்தன. நாங்கள் தோல்வியடைய போகிறோம் என்ற நேரத்தில் அனைவரும் வருத்தமடைந்தார்கள். ஒரு அணியாக இந்த தடைகளை தாடி முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

எங்களுடைய விளையாடும் யுத்தியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்தோம். ஆஸ்திரேலியாவும் அவர்களது விளையாடும் முறையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர்கள் இந்த போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்கள். மேலும் எனக்கு தெரிந்தவரையில் வரும் போட்டிகளிலும் இதோ போன்று தான் அவர்கள் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.

போட்டியில் தோல்வி என்பது சில முறை நடக்கத்தான் செய்யும், அதுதான் இயற்க்கை. ஆனால் நாங்கள் விளையாடிய விதம் சரியாக இருந்தது என்று தான் நான் நினைக்கிறேன். எனவே வரும் போட்டிகளிலும் எதிரணிக்கு மேலும் அழுத்தத்தை கொடுப்போம். டெஸ்ட் கிரிக்கெட் என்பது குத்துசண்டை போன்றது அனைவரும் ஒரே மாதிரியாக விளையாட மாட்டார்கள். இந்த போட்டியை இந்த மைதானத்தில் இருப்பவர்கள் முதற்தொண்டு உலக ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசித்தார்கள் என்று நினைக்கிறன். அதில் நாங்களும் இருக்கிறோம் என்றார்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை