ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்த தோனி, தற்போது பிரெட் லீ சொன்ன நற்செய்தி.
இந்த சீசன் கண்டிப்பாக ஐபிஎல் ரசிகர்களின் வாழ்க்கையில் நீக்காத ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஏனெனில் இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்ற சோசியல் மீடியாவில் பலவிதமான தகவல்கள் பரவி வருகிறது, குறி
இந்த சீசன் கண்டிப்பாக ஐபிஎல் ரசிகர்களின் வாழ்க்கையில் நீக்காத ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஏனெனில் இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்ற சோசியல் மீடியாவில் பலவிதமான தகவல்கள் பரவி வருகிறது, குறிப்பாக சமீபத்தில் தோனி “இது என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் கட்சி கட்டம் இதனை முழுவதுமாக ரசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் கொல்கத்தாவில் நடந்த போட்டி கொல்கத்தாவின் மைதானத்தில் நடந்தாலும் அது CSK மைதானம் போல மஞ்சள் நிற ஜெர்சிகள் தான் எல்லா பக்கமும் இருந்தது. அதிலும் போட்டி முடிந்தவுடன் இவர்கள் எனக்கு Farwall கூற வந்திருக்கிறார்கள் என்று கூறினார். அது ரசிகர்களுக்கு அதிச்சியையும், ஒரு வேலை தோனிக்கு இதுதான் கடைசி சீசனா என்று ரசிகர்கள் சோகத்திற்கு உள்ளாகினார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிரபல ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரெட் லீ தோனி ஓய்வு குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
தோனி ஓய்வு குறித்து பிரெட் லீ :
அவர் கூறியதாவது “சிஎஸ்கே எந்த மைதானத்தில் விளையாடினாலும், எம்எஸ் தோனி எந்த இடத்தில் பேட் செய்தாலும் தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த விஷயம் கிரிக்கெட்டுக்கும் சிறந்தது என்று தான் நான் நினைக்கிறன் நினைக்கிறேன். குறிப்பாக கொல்கத்தா vs சென்னை ஆட்டத்தில் பாதிக் கூட்டம் மஞ்சள் ஜெர்சியை அணிந்து வந்திருந்தார்கள். அந்த செயல் தோனியின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பையும் ஆதரவையும் இது காட்டுகிறது என்றார் பிரெட் லீ.
மேலும் பேசிய அவர் “தோனியின் விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அப்படிப்பட்ட முன்னுதாரமாக இருக்கும் வீரர்கள் ஓய்வு பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இது அவருடைய கடைசி வருடமாக இருந்தாலும் நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள இம்பேக்ட் பிளேயர் விதிமுறையினால் அவர் இன்னமும் 1அல்லது 2 வருடங்கள் விளையாடலாம். இந்த விதிமுறை கிரிக்கெட்டில் வரவேற்கத்தக்க ஒன்றாகும், இது சொந்த ஊர் வெளியூர் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தாமல் போட்டியை சுவாரஸ்ய மாக்குகிறது என்றார்.
இந்த வருடம் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவதை நாம் பார்ப்பது கடைசியாக இருக்காது அவர் இன்னமும் ஒரு வருடம் விளையாடுவார் என்று நம்புகிறேன். அதே போல அவர் தலைமையில் விளையாடும் இளம் வீரர்களை தன்னுடைய குடும்பத்தில் ஒருவரை போல அவர் நடத்துகிறார். அவரது கேட்டன்சியில் வீரர்கள் பள்ளிக்கு சென்று படித்து முடிந்து வருவதை போல முதிர்ச்சியடைந்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பாக துஷார் தேஷ்பாண்டேவை சொல்லலாம். தோனி சிறந்த கேப்டனாக பலரின் ரோல் மாடலாக இருக்கிறார் என்றார் பிரெட் லீ.