யாருக்கு பந்துவீச கடினமாக இருந்தது? – ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ கூறிய சுவாரசியமான தகவல்.

உலகின் மிகசிறந்த பந்துவீச்சார்களின் ஒருவர் பிரெட் லீ. இவரது பந்துவீச்சிற்கும் பலரும் அஞ்சி நடுங்கி இருக்கின்றார். 221 ஒருநாள் போட்டிங்களில் விளையாடியுள்ள பிரெட் லீ பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 310 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில்

By ·

உலகின் மிகசிறந்த பந்துவீச்சார்களின் ஒருவர் பிரெட் லீ. இவரது பந்துவீச்சிற்கும் பலரும் அஞ்சி நடுங்கி இருக்கின்றார். 221 ஒருநாள் போட்டிங்களில் விளையாடியுள்ள பிரெட் லீ பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 310 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 380 விக்கெட்டுகளையும் குறைந்த போட்டிகளில் எடுத்த பிரெட் லீ கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஜியோ சினிமா நிறுவனமானது கிரிக்கெட்டில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ஜாம்பவான்களாக வலம் வந்த பல வீரர்களை அழைத்து கடந்த கால சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகிறது. அந்த வகையில் 20 தொடக்கத்தில் பேட்ஸ்மேன்களை மிகவும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளரான பிரெட் லீயை பேட்டி எடுத்திருந்தது. அப்போது அவரிடம் யார் சிறந்த பேட்ஸ்மேன், யார் சிறந்த கிரிக்கெட் வீரர்? யாருக்கு பந்துவீச கடினமாக இருந்தது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.

சிறந்த பேட்ஸ்மேன் :

இந்நிலையில் யார் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரெட் லீ கூறுகையில் “தலைசிறந்த பேட்ஸ்மேன் வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் ஒருவர் தான். அவரின் விக்கெட்டை எடுப்பது பல தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கே கனவாக இருந்தது. மேலும் அவருடைய சாதனைகளை கருத்தில் கொண்டு அவர் தான் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று தாராளமாக சொல்லி விடலாம் என்றார் பிரெட் லீ.

யாருக்கு பந்துவீசுவது கடினம் :

இதனையடுத்து யாருக்கு பந்துவீச கடினமாக இருந்தது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில் “சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு இடத்தை குறிவைத்து வந்துவீசினால் அவர் அடுத்த 6 பந்துகளையும் அதே இடத்தில் அடிக்க கூடிய டெக்னீக்கான பேட்ஸ்மேன். அதே நேரத்தில் அந்த பந்தை லாராவிற்கு வீசினால், அந்த பந்தில் அவர் 6 வகையான ஷாட்டுகளை ஆடக்கூடியவர். எனவே லாராவிற்கு பந்துவீசுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. கிரிக்கெட்டி நுட்பங்களை பொறுத்தவரையில் சச்சின் சிறந்தவர். இரண்டு பேருக்கும் பந்துவீசுவது என்பது கடினம் என்றார் பிரெட் லீ.

தலைசிறந்த கிரிக்கெட் வீரர் :

மேலும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரெட் லீ முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ஆல் ரவுண்டர் ஜாகுவஸ் காலிஸ் தான் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் அவரை போல பந்துவீச்சில் பேட்டிங்கிலும் செயல்படும் வீரர் எவரும் இல்லை என்றும், அவருக்கு நிகர் அவர் மட்டும் தான் என்று புகாராளம் சூட்டினார் பிரெட் லீ.

தென்னாபிரிக்க கிரிக்கெட்டரான ஆல்ரவுண்டர் ஜாகுவஸ் காலிஸ் டெஸ்ட் போட்டிகளில் 13289 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் 11579 ரன்கள் என பல சாதனைகளை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் 166 போட்டிகள் விளைய்டியுள்ள ஜாகுவஸ் காலிஸ் 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போன்று ஒருநாள் போட்டிகளிலும் 328 போட்டிங்களில் ஆடியுள்ள இவர் 273 ரன்களை வீழ்த்தியுள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை