இன்னும் அவர் மாறல.. CSK இதை தயவு செய்து பண்ணுங்க – ஆஸ்திரேலிய ஜாம்பவான் கோரிக்கை

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2021 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டின

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2021 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் மைதானத்தில் பலபரீட்சை செய்து வருகிறது. டெல்லி அணி இதற்கு முன்பு இரண்டு தோல்விகளிலும் சென்னை அணி இதற்க்கு முன்பு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நேற்றைய போட்டியில் மோதியது.

இதில் டெல்லியில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களது ஐபிஎல் 2024 முதல் வெற்றியை பதிவு செய்ய முடியும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 191 ரன்களை குவித்து இருந்தது.

இவர்களின் சிறப்பான தொடக்க ஆட்டத்தால் ஆட்டத்தாலும் அதன் பின்பு அந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தாலும் டெல்லி அணி அவ்ளோ பெரிய இலக்கை குவித்தது இதில் டெல்லி அணியின் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களும் பிரித்வி ஷா 43 ரன்கள் அடித்திருந்தனர். அதன் பின்பு வந்து ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டிய 32 பந்துகளில் 51 ரன்கள் குறித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டர்களும் மூன்று சிக்சர்களும் அவர் அடித்து இருந்தார்

சென்னை அணியின் ஆதிக்கம் ஒரு சில ஓவர்களில் மட்டுமே இருந்தது அதன் பின்பு டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஆதிக்கம் தான் இந்த போட்டியில் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். இருந்த போதிலும் தோனி இப்படி விளையாடுவதை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களுடைய சென்னை அணி தோல்வியை தழுவ போகிறது என்பதை மறந்தது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ கூறுகையில். அவர் இன்றிரவு விளையாடிய விதத்தில் இருந்து அவர் இன்னும் மாறவில்லை என்பது தெரிகிறது. பேட்டிங்கின் அடிப்படையில் அவரிடமிருந்து எனக்கு இன்னும் நிறைய வேண்டும். அவர் மிகவும் அற்புதமாக விளையாடியிருந்தார். அவருடைய மூளை இன்னும் நன்றாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. அவர் பேட்டிங்கில் மேலே வந்து ஆட வேண்டும் இல்லையென்றாலும் CSK தயவு செய்து MS தோனியை ஆர்டரை உயர்த்துங்கள் என்றார் பிரட் லீ.

மேலும் பேசிய ஷேன் வாட்சன்கூறுகையில் “எம்.எஸ். தோனி இந்த வகை ஃபார்மில் இருக்கிறார். அவரிடமிருந்து நீங்கள் விரும்புவது இதுதான். பந்துவீச்சாளர்கள் உண்மையில் தங்களுடைய திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கும் போது தோனியின் சக்தியும் திறமையும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதை நாங்கள் பார்த்ததில்லை. இது அவரது வாழ்க்கையில் பல முறை நடந்திருக்கிறது. அவர் இன்றிரவு விளையாடிய சில ஷாட்கள் மிகவும் நல்ல ஷாட். அவர் அடித்த ஒரு ஓவர் கவர் விளையாடுவதற்கு கடினமான ஷாட்களில் ஒன்றாகும் ஆனால் அவர் அதை இன்னும் செய்கிறார் என்றார் ஷேன் வாட்சன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை