தாய் பிறந்தநாளில் அற்புதமான வாழ்த்து கூறிய பும்ரா – என்ன சொன்னார் தெரியுமா?
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இதற்கு விதிவிலக்கல்ல. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இதற்கு விதிவிலக்கல்ல. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா சிறப்பாக இந்திய அணியை வழி நடத்தி இருந்தார். அப்போது இந்திய அணி வழி நடத்த பும்ரா தான் சரியான நபர் என்று பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை எனவே ஹர்திக் பாண்டியாவை விட பும்ரா தான் சிறந்த கேப்டன் என்று அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது.
எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவிற்கு பிறகு பும்ரா தான் கேப்டனாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் குஜராத் அணியில் இருந்து விலகி தற்போது மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்துள்ளார். அது பும்ராவுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் அடுத்த இருப்பார் என்றும் பல ரசிகர்கள் கூறிவரும் நிலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் தான் பும்ரா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்த பதிவிட்க்கு போட்டிருந்த பதிவிற்கு பலரும் விமர்சனம் கூறிவந்த நிலையில் தான் தன்னுடைய தாய்க்கு பிறந்தநாள் வாழந்து கூறியுள்ளார் பும்ரா.
அவர் போட்டிருந்த பதிவில் “என்னுடைய பலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், எனக்கு கிடைத்துள்ள அனைத்துமே எங்கள் இல்லாமல் சாத்தியமாகாது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா என்று தன்னுடைய இன்ஸடா பதிவில் பும்ரா பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் இதற்கு முன்னதாக பும்ரா மௌனமே சிறந்த பதில் என போட்டிருந்த பதிவிற்கு கருத்து கூறியுள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறுகையில்
அவர் கூறுகையில் “பும்ரா போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை வாழ் நாளில் கண்டுபிடிக்க முடியாது. அவர் எந்த வடிவத்தில் ஆன கிரிக்கெட் ஆக இருந்தாலும் அவர் சிறப்பாகவே செய்வார். இதை தற்போது நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் கூட நாம் அதை பார்த்து இருப்போம். பும்ரா ஏற்கனவே இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார். எனவே ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை அணியில் இணைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அது அவர் மனதை காயப்படுத்தி இருக்கலாம்.
அவர் மீண்டும் மும்பை அணிக்கு இணைந்தது மும்பை அணி கொண்டாடி வருவது அது கூட அவருக்கு காயமாக இருக்கலாம். தற்போது நடந்து வருவது அவருக்கு நியாயம் இல்லை என்றும் தோன்றி இருக்கலாம் என்றும் அவர் கூறினார். நான் குஜராத்தை சேர்ந்தவன் நானாவது குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கலாம் என்று என்றும் அவர் நினைத்து இருக்க வாய்ப்புள்ளது. பும்ரா மிகச் சிறந்த மனிதன். இதுபோன்ற ஏதாவது எனக்கு நடந்தால் நானும் காயப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.