வீடியோ : நாயகன் மீண்டும் வரார்.. கம்பேக் கொடுக்க அதிரடியாக பயிற்சி எடுக்கும் பும்ரா.
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து முடிந்து அதில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளைய
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து முடிந்து அதில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. அதை முடிந்து கொண்டு அயர்லாந்து அணியுடன் மோத இருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே பல போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவரும் இந்திய அணியின் சில வீரர்களுக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்ய இருக்கின்றனர். அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவின் செயல்பாடு பொறுத்தே உலக கோப்பையில் அவர் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது தெரியும்.
மேலும் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் நிலையில். இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர் எவ்வாறு இந்த தொடரில் பந்து வீசப்போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
The moment we have all been waiting for. @Jaspritbumrah93 like we have always known him. 🔥🔥 #TeamIndia pic.twitter.com/uyIzm2lcI9
— BCCI (@BCCI) August 16, 2023
இந்நிலையில் ஏற்கனவே அயர்லாந்து சென்றடைந்த இந்திய அணியானது தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் பும்ரா பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் பும்ரா எவ்வளவு சிறப்பாக பயிற்சியில் பந்துவீசுகிறார் என்பதையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் அந்த வீடியோவில் பும்ரா ஒரு பவுன்சர் பந்தையம், ஒரு யார்க்கர் பந்தையும் வீசுவது போன்று காட்சிகள் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் மீண்டும் பும்ரா தனது சிறப்பான திரும்பி விட்டார் என்று தெரிகிறது.