“கேப்டனாக அவதாரம் எடுக்கும் பும்ரா” துணை கேப்டன் யார் தெரியுமா? எந்த போட்டிக்கு தெரியமா? விபரம் இதோ.
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனேவே 2 டேஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்த தொடரில் ஒரு போட்டியில் இந்தியாவும் மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது, இதனை தொடர்ந்து இன்று
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனேவே 2 டேஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்த தொடரில் ஒரு போட்டியில் இந்தியாவும் மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது, இதனை தொடர்ந்து இன்று மூன்றவது போட்டி நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டியை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 டி20 போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் வீரார்கள் சிலருக்கு உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஓய்வு தேவைப்படுகிறது, மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஆசிய கோப்பையில் ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்று கூறப்பட்ட்ட நிலையில் வரும் அயர்லாந்து தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பு அவருக்கு குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் தான் டி20 போட்டிகளில் சிலகாலம் இந்தியாவை வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா, துணை சூர்யகுமார் யாதவுடன் சுற்றுப்பயணத்தில் ஓய்வெடுத்துள்ளார்.
இதனால் வரும் இந்தியா vs அயர்லாந்து தொடரில் ஹர்திக் மற்றும் சூர்யகுமார் இல்லாத நிலையில், தேர்வாளர்கள் தலைமைப் பொறுப்பை பும்ராவிடம் ஒப்படைத்துள்ளனர், மேலும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தும் ருதுராஜ் கெய்க்வாட் அவருக்கு துணையாக பணியாற்றுவார். அயர்லாந்து vs இந்திய அணியானது 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதனை தொடந்து துணை கேப்டனாக இருக்கும் ருத்துராஜ் தலைமையிலான இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளை கலந்து கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா vs அயர்லாந்து போட்டிகளுக்கு கேப்டன் பதவி பும்ராவிற்கு கொடுத்த காரணம் அவருக்கும் மிண்டும் நம்பிக்கை கொடுப்பதற்காக இருக்கலாம்.ஏனென்றால் பும்ரா கடைசியாக செப்டம்பர் 25, 2022 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காணப்பட்டார், அதன் பின்னர் அவர் முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஆடவில்லை. மறுவாழ்வுக்காக NCA க்கு செல்வதற்கு முன், அவர் மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.இதனால் இந்த போட்டியில் அவருடைய செயல்பாடு கவனிக்கப்பட பின்னரே மீண்டும் முக்கிய வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இணைவார் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
NEWS 🚨- @Jaspritbumrah93 to lead #TeamIndia for Ireland T20Is.
— BCCI (@BCCI) July 31, 2023
Team – Jasprit Bumrah (Capt), Ruturaj Gaikwad (vc), Yashasvi Jaiswal, Tilak Varma, Rinku Singh, Sanju Samson (wk), Jitesh Sharma (wk), Shivam Dube, W Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Prasidh Krishna, Arshdeep…
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக கடைசியாக விளையாடிய பிரசித் கிருஷ்ணா, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக போட்டி கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டார். மேலும் IND vs IRE தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சிவம் துபேவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பாட்டை ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணி :
ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), ரின்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ,அர்ஷ்தீப் சிங் , முகேஷ் குமார் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.