அணியை தேர்வு செய்ய கடினமாக இருக்கிறது.. ஏனென்றால் – வெற்றிக்கு பிறகு பும்ரா மாஸ் பேச்சு.

இந்திய அணியானது சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அடித்தாக இந்தியா 3டி 20 போட்டிகள் கொண்ட அயலர்ந்து தொடரில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. ஆனால் இந்த தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதினால் பும்ரா கேப்டனாகவ

By ·

இந்திய அணியானது சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அடித்தாக இந்தியா 3டி 20 போட்டிகள் கொண்ட அயலர்ந்து தொடரில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. ஆனால் இந்த தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதினால் பும்ரா கேப்டனாகவும், ருதுராஜ் கைகுவாட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுளார்.

இந்நிலையில் இந்த தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்தியா இரண்டவது போட்டியில் நேற்று ஆகஸ்ட் 20-ஆம் தேதி டப்ளின் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அயர்லாந்து அணியை 33 ரன்கள் வித்தியாசத்தின் மூலம் இந்தியா இந்த தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அயர்லாந்து அணிக்கு எதிராக சிட்னியா டி20 தொடரில் இதுவரையில் வீழ்ந்ததில்லை என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளது.

மேலும் இந்த போட்டியில் துணை கேப்டனாகிய ருதுராஜ் கெய்க்குவாட் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அதோடு சஞ்சு சாம்சனுமும் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக பல ஷாட்டுகளை விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். இவர்கள் மட்டுமின்று சிவம் துவே ரிங்கு ரிங் இருவருமே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். குறிப்பாக ரிங்கு சிங் கடைசி ஓவரில் 3 தொடர் சிக்ஸர்களை விளாசினார். இது அணிக்கு பெரிய ரன் அமைக்க உதவியது.

ரிங்கு சிங் கூறியது :

இதனால் ரிங்கு சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் “நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். ஐபிஎல்லில் நான் செய்ததைச் இங்கே செய்ய முயற்சித்தேன். நான் மிகவும் நம்பிக்கையுடன் அமைதியாக இருக்க முயற்சித்தேன். நான் கேப்டனின் பேச்சைக் கேட்கிறேன். நான் 10 வருடங்களாக விளையாடி வருகிறேன். எனது அனைத்து முயற்சிகளும் பலனளித்தன. எனது முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

பும்ரா கூறியது :

இதனையடுத்து பேசிய கேப்டன் பும்ரா கூறுகையில் “நான் நன்றாக உணர்கிறேன். இன்று கொஞ்சம் வறட்சியாக இருந்தது. எனவே மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். அதனால் தான் முதலில் பேட்டிங் செய்தோம். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாடும் அணியை தேர்வு செய்வது என்பது மிகவும் கடுமையாக இருக்கிறது. அது நல்ல தலைவலி, ஏனென்றால் அனைவரும் ஆர்வமாக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் இந்தியாவுக்காக விளையாட விரும்பினோம்.

இறுதியில் அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் உழைக்க வேண்டும்.நீங்கள் எதிர்பார்ப்புடன் விளையாடினால் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எனவே அந்த எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைக்க வேண்டும். பல எதிர்பார்ப்புகளுடன் விளையாடினால் உங்களால் 100 சதவீதம் செயல்திறனை கொடுக்க முடியாமல் போகலாம் என்றார் ஜஸ்பிரித் பும்ரா

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை