“இது ஒரு சகாப்தத்தின் முடிவு” டேவிட் வார்னர் மனைவி போட்ட இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்.

ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னரின் ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட்டார்.சமீபத்தில்

By ·

ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னரின் ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட்டார்.சமீபத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்கிலுமே வார்னர் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்தார்.

மேலும் ஆஸ்திரேலியா இந்த போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், வார்னரின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் டேவிட் வார்னர் மனைவி கேண்டீஸ் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் தான் ஒருவேளை டேவிட் வார்னர் இடஙக டெஸ்ட் பொடியோடு ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்ஸ்டா பதிவு :

அவர் போட்டிருந்த பதிவில் “எங்களுக்கு இது ஒரு சகாப்தத்தின் முடிவு, டெஸ்ட் கிரிக்கெட்டுடன் சுற்றுப்பயணம் முடிகிறது. இது ஒரு மகிழ்ச்சியான பயணம். எப்போதும் உங்கள் சிறந்த ஆதரவாளர்களும், உங்களை நேசிக்கும் ரசிகர்களாகவும் எப்போதும் இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். இந்த இடுகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு குழப்பத்தை தூண்டியுள்ளது, ஏனெனில் டேவிட் வார்னர் இன்னும் சில காலங்களில் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வுக் குழு இன்னும் அறிவிக்காத நிலையில். ஒருவேளை இது வார்னரின் ஓய்வாக இருக்குமாயின் நான்காவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கான வாய்ப்பை மாட் ரென்ஷாவுக்கு உருவாக்கலாம் என்று சில ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், கேண்டீஸ் அவர்களின் இறுதி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மட்டுமே குறிப்பிடுவதாகவும், டெஸ்டில் இருந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவதைக் குறிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Mrs Candice Warner (@candywarner1)

ஐபிஎல் போட்டியின் போது கூறியது :

இதனிடையே கடந்த ஐபிஎல் போட்டியின் போது பேசிய வார்னர் தன்னுடைய ஓய்வு குறித்து சொல்லியிருந்தார் அவர் கூறுகையில் “6 டெஸ்ட் போட்டிளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வந்திருக்கிறோம். நான் என்னுடைய குடும்பத்திற்கு கடமை பட்டிருக்கிறேன். ரன்களை வரும் போட்டியில் அடித்தால் தொடர்ந்து விளையாடுவேன். ஆனால் நிச்சயமாக வெஸ்ட் இன்டியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட மாட்டேன். நான் வரும் உலகக்கோப்பை போட்டியில் நன்றாக விளையாடினாள் பாகிஸ்தானுக்கு எதிரான விளையாடும் தொடருடன் முடித்து விடுவேன்.

நான் விளையாடும் அனைத்து போட்டிகளையும் என்னயுடைய இறுதி போடியாகத்தான் நினைத்து விளையாடுகிறேன். அதுதான் நான் தான் என்னுடைய ஸ்டைல். என்னுடைய அணியுடன் விளையாடுவது பிடித்திருக்கிறது. இந்தியாவுடன் டெஸ்ட் போட்டி ஆரம்பித்து. தற்போது அது சவாலான போட்டியாக மாறியுள்ளது. அதற்கு பிறகு சர்வதேச போட்டிங்களில் விளையாடி என்னுடைய பார்மை தக்கவைத்து கொள்வதே என்னுடைய எண்ணமாக இருக்கிறது.

மேலும் நானா வரும் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். அதற்கு முன்னர் அதிக போட்டிகள் இருக்கிறது. ஓய்வுக்கு பிறகும் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகள் இருக்கிறது என்று தெரிவித்தார் வார்னர்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை