வலியிலும் வலிமையாக நின்று அணியை காப்பற்ற முயற்சித்த கேப்டன் டு பிளெசிஸ், தோல்வியை தழுவிய பெங்களூரு அணி.

ஐபிஎல் போட்டியை விளையாடுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல வீரர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள், மேலும் இந்த வீரர்கள் தங்கள் விளையாடும் அணியை வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைக்கிறார்கள். பல முறை இந்த வீரர்கள் காயம் அடைந்தாலும் தங்கள் அணியை வெல்வதற்காக விளையாடுவதைக் காண

By ·

ஐபிஎல் போட்டியை விளையாடுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல வீரர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள், மேலும் இந்த வீரர்கள் தங்கள் விளையாடும்  அணியை வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைக்கிறார்கள். பல முறை இந்த வீரர்கள் காயம் அடைந்தாலும் தங்கள் அணியை வெல்வதற்காக விளையாடுவதைக் காணலாம்.  இதே போன்ற ஒன்று ஐபிஎல் 2023 இன் 24 வது போட்டியில் காணப்பட்டது. அப்போட்டியில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தனது அணியை வெல்ல கிட்டத்தட்ட தன்னையே  தியாகம் செய்தார்.

முதுகுவலியால் அவதிப்பட்ட டு பிளெசிஸ்

நேற்று இரவு எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இருப்பினும், அதையும் மீறி பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளெசிஸை மக்கள் பாராட்டி வருகின்றனர். இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்னவென்றால், டு பிளெசிஸ் சில  நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவர் தனது அணியை வெல்ல ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுகிறார்.

நேற்றைய போட்டியில் டு பிளெஸ்ஸிக்கு முதுகுவலி அதிகமாக இருந்தது, அதன் பிறகும் அவர் பேட்டிங் செய்ய வந்து சென்னை அணியின் பௌலர்கள் வீசிய 33 பந்துகளை எதிர்கொண்டு தனது அணிக்காக 62 ரன்களை சேர்த்தார். அந்த வலியிலும் அவர் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை அடித்தார். முதுகுவலி காரணமாக, டு பிளெசிஸ் பேண்டேஜுடன் பேட்டிங் செய்தார், அதன் சில புகைபடங்கள் இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தனது அணிக்காக டு பிளெசிஸின் இந்த மாபெரும் உழைப்பை கண்டு அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது, அதற்கு பதிலளித்த சென்னை 20 ஓவரில் 226 ரன்களை குவித்தது எடுத்தது. ஆனால், சென்னை அளித்த இலக்கை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவரில் 218 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி  8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை