நாங்க அதுக்கு தான் மைதானத்தில் அந்த பேப்பரை பார்த்தோம். கேப்டன் எட்வர்ஸ் பேச்சு.

நாங்கள் அதுக்கு தான் பேப்பரை பார்த்தோம் கேப்டன் பகிர்ந்தது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற

By ·

நாங்கள் அதுக்கு தான் பேப்பரை பார்த்தோம் கேப்டன் பகிர்ந்தது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர். இரண்டு வெற்றியில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.

நேற்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியது. மழையின் காரணமாக போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது அணியில் அதிகபட்ச எட்வர்ட்ஸ் 78 ரன்களும் வான் டெர் மெர்வே 29 ரன்களும் ஆரியன் தட் 23 ரன்களையும் குவித்தனர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி வந்தாலும் அதன் பின்பு தன்னுடைய விளையாட்டை சிறப்பாக மாற்றினார்கள்.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் அவ்வப்போது ரன்களை விட்டுக் கொடுத்தும் 31 எக்ஸ்ட்ரா ரன்களை விட்டுக் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கு இங்கிடி மற்றும் ஜான்சன் ராபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கேச மகாராஜ் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி தலா ஒரு விக்கெட்டைகளையும் விழித்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் கடைசியில் சுமாராக தான் இருந்தது.

43 ஓவர்களில் 246 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் இருந்தாலும் போகப்போக அந்த தொடக்கத்தை அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்ச ரன்களாக டேவிட் மில்லர் 43 ரன்களும் க்ளாசண் 28 ரன்களும் கோட்சி 22 ரன்கள் மட்டுமே அடித்தனர். 42.5 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து உங்களை 207 மட்டுமே அடிக்க முடிந்தது.

நெதர்லாந்து அணியில் பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை கட்டி போட்டனர்.லோகன் வான் பீக் 3 விக்கெட்டும் ரோலோஃப் வான் டெர் மெர்வே,பால் வான் மீகெரென், தலா இரண்டு விக்கெட்களையும் ஆங்கர்மெண் ஒரு விக்கெட்டை வீழ்த்தி நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்த உலகக்கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

எட்வர்ட்ஸ் கேப்டன் கூறியது:

நாங்கள் சில ஆராய்ச்சி கலை நியாயமாக செய்தோம் நாங்கள் சில மேட்ச்ர்களை கொண்டு வந்தோம் ஆனால் அது சில நாட்களில் வேலை செய்யும் சில நாட்களில் வேலை செய்யாது அது அந்த பேப்பரில் இருந்தது அப்படிப்பட்ட திட்டங்கள் தான்! இன்றைய இரவு பார்ப்பதற்கு எங்களுக்கு எல்லாமே நன்றாகத்தான் அமைந்தது அல்லது இரண்டு போட்டிகளில் எங்களுடைய மிடில் ஆர்டர் சரியாக விளையாட முடியவில்லை இன்று நான் பொறுப்பு எடுத்துக் கொண்டு நன்றாக நினைத்து விளையாடினேன். இன்று முதல் அந்த அணியின் கேப்டன் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை