உஸ்மான் க்வாஜா ஷூ சர்ச்சை. உஸ்மான் க்வாஜாக்கு ஆதரவாக நின்ற கேப்டன் பாட் கம்மின்ஸ்.
உஸ்மான் க்வாஜா அவரது ஷூவில் வாக்கியங்களையும் சில குறியீடுகளையும் அவர் அணிந்து இருந்தார். இதை பார்த்த icc அதை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்க்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஐசிசியை கடுமையாக சாடியிருந்தார். பல மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. அதில
உஸ்மான் க்வாஜா அவரது ஷூவில் வாக்கியங்களையும் சில குறியீடுகளையும் அவர் அணிந்து இருந்தார். இதை பார்த்த icc அதை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்க்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஐசிசியை கடுமையாக சாடியிருந்தார். பல மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. அதில் பல அப்பாவி மக்கள் இரண்டு பக்கமும் உயிரிழந்து உள்ளனர். அதற்காக அனைத்து உயிர்களும் சமம் என்றும் பலஸ்தீன கோடி வண்ணத்தில் அவர் அவரது ஷூவில் ஒரு வசனத்தை எழுதி இருந்தார்.
இதனை பார்த்த ICC அவர் அந்த ஷூ அணிந்து போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி தடை விதித்த நிலையில், கையில் கருப்பு பட்டை அணிந்தபடி முதல் டெஸ்டில் பங்கேற்ற கவாஜா, ஐ.சி.சி.க்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டையும், ஷூவையும் பயன்படுத்த அவர் அனுமதி கோரி இருந்த நிலையில், அனுமதி வழங்க ஐ.சி.சி. மறுத்து இருந்தது. இதைப் பற்றி பேசிய கேப்டன் பாட் கம்மின்ஸ், கவாஜாவுக்கு ஆதரவாக முன் வந்தார்.
அவர் கூறுகையில், உண்மையில் இல்லை, இல்லை – பயன்பாட்டின் நுணுக்கங்கள் எனக்குத் தெரியாது, ஆனால் அது அழகான வெண்ணிலா, புறா என்று நான் நினைக்கிறேன். எல்லா உயிர்களும் சமம், அது மிகவும் புண்படுத்தும் விஷயம் என்று நான் நினைக்கவில்லை, புறாவைப் பற்றி நான் அதையே கூறுவேன். இருப்ப்பினும் ஐசிசி அதை மறுத்துள்ளது. அவர்கள் விதிகளை உருவாக்குகிறார்கள், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதனை கண்ட மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் ஹோல்டிங் ICCயின் நடவடிக்கைகள் அதிர்ச்சியையும் ஆச்சிரயத்தையும் அளிக்கின்றது. இது போன்று வேறு எதாவது விளையாட்டு அமைப்பு இருந்து இருந்தால் அனைத்திற்க்கும் ஒரு மாதிரியாக குரல் கொடுத்து இருப்பார்கள். ஐசிசியை பொறுத்தவரை நிறவெறி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த எந்த ஒரு விஷயத்திற்கும் அனுமதி அளிக்காது. அது போன்ற விதி இருக்கும் போது கறுப்பின மக்களுக்காக ஆதரவு தரும் வகையில் இயக்கத்தை நடத்தியது ஏன்?
அதே போல் ஓர் இன சேர்க்கைக்காக ஸ்டம்பின் நிறத்தை வானவில் கலரில் மாற்றியது ஏன்? மக்களுக்காக குரல் கொடுக்கும் இது க்வாஜா விஷயத்திற்கு தடை போடுவதில் எதாவது நியாம் இருக்கின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.