மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
வரும் ஜூலை மாதம் 12 முதல் தொடங்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளை உள்ளடக்கிய பல வடிவ
வரும் ஜூலை மாதம் 12 முதல் தொடங்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளை உள்ளடக்கிய பல வடிவத் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இந்த போட்டிகளின் மூலம் அடித்து நடக்கவிருக்கும் 2023 மற்றும் 2025 டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் நுழைகிறது இந்தியா.
இந்நிலையில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி உலகக்கோப்பை டஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் 2021-23க்கான இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது. அதுவும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியத்தினால் அணியின் மீதும், கேப்டன் ரோஹித் சர்மாவின் மீதும் பலவிதமான விமர்சங்கள் எழுந்தன.
இருந்த போதிலும் மறுபுறம் கடந்த ஒரு ஆண்டாக ரோஹித் ஷர்மா குறிப்பிடத்தக்க வகையில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் கேப்டனாக பொறுப்புகளை சுமந்ததிலிருந்து கடுமையான பணிச்சுமையை எதிர்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கந்த வருடம் ஜூன் மதம் முதல் கேப்டனாகவும் வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார். அதோடு. ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸ்யும் வழிநடத்தினார்.
இப்படி WTC இறுதிப் போட்டிக்கு முன்னதாக பெரும்பாலான போட்டிகளை விளையாடினார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஓய்வில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கும் ரோஹித் சர்மாவிற்கு வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் சில போட்டிகளில் ஓய்வளிக்கப்படலாம் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இது தொடர்பாக கிடைத்துள்ள தகவலின் படி “ஐபிஎல் மற்றும் இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ரோஹித் சற்று சோர்வாக காணப்பட்டார் என்றும் இதனால் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் சில பகுதிகளுக்கு அவர் ஓய்வெடுக்க தேர்வாளர்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் டெஸ்ட் அல்லது எட்டு போட்டிகள் கொண்ட ஒயிட்-பால் தொடரை தவறவிடுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்படத்தக்க வகையில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்கில் 15 ரன்களும் இரண்டாவது இன்னிங்கில் 43 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார். மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் ரோஹித் 16 போட்டிகளில் 20.75 சராசரியில் 332 ரன்கள் மட்டுமே குவித்தது குறிப்பிடதக்கது.