அவங்க ரெண்டு பெரும் இல்லாதது பெரிய பிரச்சனையாக இருந்தது – தோல்வி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஏல் 2024 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இந்த இரு அணிகளும்
உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஏல் 2024 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இந்த இரு அணிகளும் ப்ளே ஆப் ரேசில் தொடர்ந்து இருக்க இந்திய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இருந்தார். அது அவர்களுக்கு சிறப்பாக அமைந்தது
சென்னை அணி கடைசிவரை போராடி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டும் தான் அடித்து இருந்தது. இதில் அதிக பட்சமாக கேப்டன் ருதுராஜ் 62 ரன்னும் ரகானே 29 ரன்களையும் சமீர் ரிஸ்வி 21 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்த அளவிற்கு குறைவான ரன்களை அடிக்க முக்கிய காரணம் கேப்டன் தான். ஆரம்பத்தில் ரகானே வெளியேறிய உடன் மொயின் அலி அல்லது மிட்சலை கொண்டு வந்து இருக்க வேண்டும் அதற்க்கு பதிலாக துபேவை கொண்டு வந்தார் அவரும் ரன் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின்னாவது அலி அல்லது மிட்ச்சலை கொண்டு வந்து இருக்க வேண்டும் ஆனால் அதுவும் செய்யவில்லை.
163 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 17.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிக பட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 46 ரன்களையும் ரூசோ 43 ரன்களையும் அடித்து இருந்தனர். அதன் மூலமாகவே பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இந்த வெற்றியில் புள்ளி பட்டியலில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை இருப்பினும் சென்னை அணி இன்று இரவு செய்த தவறுகளை அடுத்த போட்டியில் திருத்திக்கொண்டு அடுத்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
தோல்வி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கூறுகையில், உண்மையாக சொல்ல வேண்டுமானாலும் 50-60 ரன்கள் குறைவு. நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் போது, ஆடுகளம் சிறப்பாக இல்லை, மேலும் பனியும் இருந்தது. நான் நிறைய பயிற்சி செய்துள்ளேன். நான் போட்டியில் டாஸ் செய்துள்ளேன். நான் பயிற்சியில் வெற்றி பெறுகிறேன், ஆனால் போட்டியில் வெற்றி பெறவில்லை. என்ன செய்ய. நான் உண்மையில் டாஸில் அழுத்தத்தில் இருக்கிறேன், ஆட்டத்தில் அல்ல. [பனி] மிகவும் கடினம்.
முதல் இன்னிங்சில் நாங்கள் சற்று சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். கடந்த 2 ஆட்டங்களில், 200-210 ரன்களை எடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். இந்த ஆடுகளம் 180 பெறுவது கடினமாக இருந்தது. பத்திரனா, தேஷ்பாண்டே இது ஒரு உண்மையான பிரச்சனை. நீங்கள் ஒரு விக்கெட்டைப் பெற விரும்பும் கட்டங்கள் உள்ளன, மேலும் உங்களிடம் இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர், மேலும் பனிப்பொழிவு காரணமாக ஸ்பின்னர்கள் கேள்விக்கு இடமில்லை. அதிகம் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.