நாங்க இதை எல்லாம் சரி செஞ்சி இருந்தா ஜெயிச்சி இருப்போம். எங்களோட அணிய நினைச்சி பெருமை படுறோம் – கேப்டன் சுப்மான் கில்

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் 2025 ஜூலை 14 அன்று நிறைவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இறுதி நாள் ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜாவின் தனி ஒருவனின் போராட்டம் வீணானது.இந்தத் தோல்வி

By ·

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் 2025 ஜூலை 14 அன்று நிறைவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இறுதி நாள் ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜாவின் தனி ஒருவனின் போராட்டம் வீணானது.இந்தத் தோல்வி தொடரில் இங்கிலாந்தை 2-1 என முன்னிலை பெற வைத்துள்ளது. இந்த பின்னடைவுக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது அணியின் செயல்பாடுகள் மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

போட்டியின் பரபரப்பான முடிவு மற்றும் தோல்விக்கான காரணங்கள்

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்த நிலையில் தொடங்கியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கடும் போட்டி நிலவிய நிலையில், லார்ட்ஸில் நடந்த இந்த மோதலும் இறுதி நாள் வரை சென்றது.

தோல்வி குறித்து கில் பேசியது.

இந்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அவர் தனது அணியின் போராட்டத்தைப் பாராட்டிய அதே வேளையில், தோல்விக்கான காரணங்களையும் சுட்டிக்காட்டினார். அவர் கூறியது : கடும் அழுத்தத்திற்குப் பிறகும் எங்கள் அணி காட்டிய போராட்டத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆட்டம் இறுதிவரை சென்றது, குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் போராட்டம் அணியின் மன உறுதியை வெளிப்படுத்தினார். தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, போதுமான பேட்டிங் பார்டனர்ஷிப் அமையாதது தான். நமக்கு இரண்டு ஐம்பது ரன் பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டன, ஆனால் அதை எங்களால் பெற முடியவில்லை.

ரிஷப்பின் ரன் அவுட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் ஒருவேளை 50-100 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தால், அது ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருக்கலாம். களத்தில் வீரர்களிடையே ஏற்பட்ட வார்த்தைப் போர் குறித்து கேட்டபோது, கில் அது விளையாட்டின் ஒரு பகுதிதான் என்று கூறினார். “ஐந்து நாட்கள் கடின உழைப்பை ஐந்து நிமிடங்கள் வரையறுக்க முடியாது,” என்று கூறி, வீரர்களுக்கிடையே பரஸ்பர மரியாதை இருப்பதாகவும், இது விளையாட்டின் தீவிரம் காரணமாக ஏற்படும் உணர்ச்சி வெளிப்பாடுகள் என்றும் விளக்கினார்.

இந்தத் தோல்வி தொடரில் இங்கிலாந்தை முன்னிலை பெற வைத்துள்ளது. சுப்மன் கில்லின் தலைமைத்துவத்தில் இந்திய அணி இந்த பின்னடைவிலிருந்து மீண்டு வந்து அடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை