கேப்டனாக இது வரை யாரும் செய்யாத சாதனயை படைத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ். தோனி கூட இவருக்கு அடுத்த இடத்தில் தான்.

உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த நிலையில அதன் பின்னதாக ஆஸ்திரேலிய அணி ஐந்து தொடர் கொண்ட டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயண

By ·

உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த நிலையில அதன் பின்னதாக ஆஸ்திரேலிய அணி ஐந்து தொடர் கொண்ட டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வருகிறது.

அதில் முதல் போட்டி நேற்று முன்தினம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னும் மிஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளில் எந்த அணி வெற்றிப்பெறுகிறதோ அதுதான் இந்த தொடரில் வெற்றி பெற்றது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதில் இன்று இரண்டாவது போட்டியை தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஆதிக்கத்தை செலுத்தியதால் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர்.

குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெயஸ்வால் மற்றும் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றத்தை அளித்தனர். இருப்பினும் கேப்டன் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 19.3 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குவித்திருந்தது. இந்தியா அணியின் அதிகபட்சமாக ரிங்கு சிங் 68 ரன்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும் ஜிதேஷ் வர்மா 29 ரன்களையும் குவித்து இருந்தனர் . எனவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. (போட்டியானது மழையின் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது)

தென்னாபிரிக்கா அணி சார்பில் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளையும் ஜான்சன், வில்லியம்ஸ்,ஷம்சி மற்றும் மார்க்கரம் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் யாரும் செய்யாத புதிய ஒரு சாதனையை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்து இருந்தார். அது என்னவென்று பார்த்தால் இது வரை எந்த ஒரு கேப்டனும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அரை சத்தத்தை பூர்த்தி செய்யவில்லை என்பது தான்.

இந்த போட்டிக்கு முன்னதாக எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்த போது 2007 ஆம் ஆண்டு அவர் 45 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களை குவித்து ஒரு சாதனையை படைத்தது இருந்தார்.இதில் 4 பவுண்டரிகளும் 3 சிக்சர்களையும் அடித்து இருந்தார். அந்த ஒரு சாதனை மட்டுமல்லமால் சூர்யகுமார் யாதவ் குறைந்த பந்துகளில் 2000 ரன்களை T20 போட்டியில் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தது இருந்தார் அதாவது 1162 பந்துகளில் அவர் 2௦௦௦ ரன்களை கடந்து இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை