அடுத்தடுத்த போட்டியில் சாதனை படைத்து, தென்னாபிரிக்கா அணியை திணற வைத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த நிலையில அதன் பின்னதாக ஆஸ்திரேலிய அணி ஐந்து தொடர் கொண்ட டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயண
உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த நிலையில அதன் பின்னதாக ஆஸ்திரேலிய அணி ஐந்து தொடர் கொண்ட டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வருகிறது.
அதில் முதல் போட்டி சில நாட்களுக்கு முன் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னும் மிஞ்சி இருக்கும் இரண்டுவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். அதில் இன்று மூன்றாவது போட்டியை தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஆதிக்கத்தை செலுத்தியதால் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் கேப்டன் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 2௦ ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்திருந்தது. இந்தியா அணியின் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்களும் ஜெய்ஸ்வால் 60 ரன்களும் ரின்கு சிங் 14 ரன்களையும் குவித்து இருந்தனர் . எனவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் வில்லியம்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷம்சி மற்றும் பர்கர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் யாரும் செய்யாத புதிய ஒரு சாதனையை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்து இருந்தார். அது என்னவென்று பார்த்தால் இது வரை எந்த ஒரு கேப்டனும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சததத்தை பூர்த்தி செய்யவில்லை என்பது தான்.
இந்த போட்டிக்கு முன்னதாக எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்த போது 2007 ஆம் ஆண்டு அவர் 45 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ஒரு சாதனையை படைத்தது இருந்தார். இதில் 7 பவுண்டரிகளும் 8 சிக்சர்களையும் அடித்து இருந்தார். இந்திய அணி சார்பில் இது வரை யாரும் செய்யாத சாதனை ஒன்றை அவர் செய்துள்ளார். ரோகித் சர்மா – 182 சிக்ஸர், சூரியகுமார் யாதவ் – 118 சிக்ஸர்,விராட் கோலி – 117 சிக்ஸர்