14 மாதங்களுக்கு கிடைத்த கேப்டன் வாய்ப்பு. அதை பயன்படுத்தி தோனியின் சாதனயை முறியடிக்க கிடைத்த அறிய வாய்ப்பு.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.
14 மாதங்களுக்கு பின் கேப்டன் பதவியேற்ற ரோஹித் சர்மா தோனியின் சாதனையை சமன் செய்வாரா என்று பல ரசிகர்களால் எதிர்பார்த்து படுகிறது. அது என்னவென்றால் T20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று தோனியின்(42) முதல் இடத்தில் இருந்து வருகிறார் அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் இரண்டாவது(40) இடத்திலும் தற்போது இந்திய அணியின் டி20 கேப்டன் ரோஹித் ஷர்மா ஷர்மா மூன்றாவது(39) இடத்திலும் இருந்து வருகிறார்.
நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் அவர் வெற்றி பெற்றால் டி20 போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற தோனியின் சாதனையை அவர் சமன் செய்வார் இது தற்போது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.