கொல்கத்தா அணியின் தொடர் வெற்றிக்கு தடை போட்ட சென்னை அணி. திணறி போன கொல்கத்தா அணியின் வீரர்கள்

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 222வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இத

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 222வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதற்க்கு முன்பு சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டயாத்தில் இருந்தது வந்தது. அந்த அழுத்தம் இந்த போட்டியில் இருந்து வெளியேறியது.

ஆனால் கொல்கத்தா அணி இதற்க்கு முன் நடந்த மூன்று போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று இருந்தது. அதற்க்கு பெரிய தடையை சென்னை அணி ஏற்படுத்தி இருந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார். அதற்க்கு ஏற்றார் போல் முதல் பந்திலேயே சால்ட் விக்கெட்டை வீழ்த்தினார் துஷார் தேஷ்பாண்டே. கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்ஸ்களால் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர்.

சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே அவர்களது பணியை செய்து இருந்தார்கள்.கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டில் பந்து படவே இல்லை. இறுதியில் கொல்கத்தா அணியால் 20வது ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமீ அடித்து இருந்தது. கொல்கத்தா அணியின் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களும் நரைன் 27 ரன்களும் ரகுவான்ஷி 24 ரன்களையும் அடித்து இருந்தனர். மற்ற வீரர்களால் பெரிதாக ரன்களை குவிக்க முடியவில்லை. இதில் சென்னை அணி சார்பில் ஜடேஜா மாற்றம்20தேஷ்பாண்டே மூன்று விக்கெட்டுகளையும் முஸ்தபீசூர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளையும் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.

அதன் பின் 138ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தனர். அதன் விளைவாக சென்னை அணி 17.4 ஓவர்கள் முடிவில் 141 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களையும் துபே 28 ரன்களையும் மிட்சல் மார்ஷ் 25 ரன்களையும் எடுத்து இருந்தனர். கொல்கத்தா அணியின் சார்பில் நரைன் மற்றும் அரோரா தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.

சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளில் இருந்து இந்த வெற்றியின் மூலம் மீண்டு வந்துள்ளது. இந்த வெற்றி கொல்கத்தா அணியின் அடுத்தடுத்து வெற்றிகளுக்கு தடையாக இந்த தோல்வி கொல்கத்தா அணிக்கு அமைந்தது. இந்த போட்டியில் கேப்டன் ருதுராஜ் தனது கேப்டன்சியில் முதல் அரை சதத்தை அடைத்து இருந்தார். அது மட்டுமல்லாமல் சென்னை அணிக்காக கேப்டனாக ஐந்து வருடங்களுக்கு பிறகு இன்று தான் ஒரு அரை சதத்தை பதிவு செய்து இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை