IPL வரலாற்றில் 10வது முறையாக பைனலுக்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் -குஜராத்தை வீழ்த்தி அதிரடி வெற்றி.
ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை
ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை அடித்து இருந்தனர். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்கள். 36 பந்துகளில் பந்துகளிலே தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ருதுராஜ். அந்த நிலையில் அதிரடியாக விளையாட நினைத்து 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் அதன் பின் வந்த துபே 1 ரன் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் திணறியே வந்தனர். சிறப்பான பந்து வீச்சின் மூலம் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர். 17 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழந்து 137 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். 17 ரன்கள் இருந்த நிலையில் ராயுடு அவுட்டாகி வெளியேற, சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி வந்த வேகத்திலேயே 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 20 வது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்த நிலையில் 172 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
173 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சாஹா நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் 12 ரன்களில் சாஹா அவுட்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். குஜராத் அணியின் ஆட்டக்காரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்ட வந்தார். ஷனகா 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 12 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட்களை இழந்த நிலையில் 84 ரன்களை எடுத்து திணறி வந்தனர். மில்லர் 7 ரன்களிலும், கில் 42 ரன்களில் வெளியேற போட்டி சென்னை அணியின் கைக்கு மாறியது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த வந்தது குஜராத் அணி. திவாட்டியா 3 ரன்னில் அவுட்டாகி வெளியேறினர்.
அதன் பின் வந்த ரஷித் கான் தனது அதிரடியை காட்டி குஜராத் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த விஜய் ஷங்கர் 14 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, நல்கண்டே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதிரடியாக விளையாடி வந்த ரஷித் கான் 30 ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது