1115 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் அணியை வைத்து சம்பவம் செய்த சென்னை அணி. தன்னை REAL ஆல்ரவுண்டர் என நிருபித்த தளபதி ஜடேஜா

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 53 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் மோதியது. சென்னை அணி

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 53 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் மோதியது. சென்னை அணி இதற்க்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை தழுவி இருந்தது. அதற்க்கு ஈடுகட்டும் வகையில் தான் இன்றைய போட்டி அமைத்தது.

சென்னை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி 5 போட்டிகளிலும் சென்னை அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியை மட்டுமே தழுவி இருந்தது. ஆனால் இன்றைய போட்டி முற்றிலும் அதற்க்கு மாறாகவே அமைந்து இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த வெற்றி சென்னை அணி 1115 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் அணியை வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு இறுதி வரை கை கொடுத்தது என்று சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. சென்னை அணியின் வீரர்கள் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஜடேஜா சிறப்பாக பேட்டிங் மற்றும் பௌலிங் செய்து இருந்தார். சென்னை அணி சார்பில் அதிக பட்சமாக சென்னை அணி ஜடேஜா 43 ரன்களும் ருதுராஜ் 32 ரன்களும் மிட்சல் 30 ரன்களையும் அடித்து இருந்தார்கள்

168 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பலாக அமைய 20 ஓவர்கள் முடிவில் அவர்களால் 139 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 30 ரன்களும் ஷஷாங்க் சிங் 27 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. சென்னை அணியின் பந்து வீச்சை பஞ்சாப் அணியால் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபக இருந்தது.

சென்னை அணி சார்பில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் சிமர்ஜித் மற்றும் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் மற்றும் சான்ட்னர் தலா ஒரு விக்கேட்டுகையும் வீழ்த்தி இருந்தார்கள் இதன் மூலம் பஞ்சாப் அணியை 1115 நாட்களுக்கு பிறகு இன்று வெற்றியை பதிவு செய்து இருந்தது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை