பூச்சாண்டி காட்டி வந்த ஹைதராபாத் அணியை சுருட்டிய தேஷ்பாண்டே. புள்ளி பட்டியலில் மேலே சென்ற சென்னை அணி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 22 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.அதில் இன்று 46 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 22 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.அதில் இன்று 46 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதற்கு முன்பு நடந்த சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணியை வெற்றி பெற்று இருந்தது. ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பம் முதல்ல கை கொடுக்கவில்லை. சென்னை அணியின் பேட்ஸ்மேன் வந்ததில் இருந்தே ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுக்களை அனைத்து பக்கங்களிலும் சிதற அடித்திருந்தனர். சென்னை அணியின் தொடக்க ஆட்டுக்கார ரகானே அவ்வளவு சிறப்பாக ஜோலிக்காமல் வெளியேறினாலும் அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து டேரில் மிட்சல் சிறப்பாக விளையாடிய அணிக்கு ரன்களை சேர்த்து வந்தனர்’
டேரில் மிட்சல் இதற்க்கு முன்னதாக விளையாடிய போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி அவர் அது திறமையை அவர் நிரூபித்திருந்தார். அதன் பின் அவரும் வெளியேற ருது ராஜ் உடன் இணைந்த துபே அனைத்து பக்கங்களிலும் பந்துகளை வெளியேறுத்திருந்தார். அதன் பின் வந்த தல தோனியும் இரண்டு பந்துகளில் 5 ரன்கள் அடித்து அசதி இருந்தார். எனவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்றைக் விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குறித்தது.
இதில் அதிகபட்சமாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 98 ரன்களை அடித்து தனது மூன்றாவது சதத்தை தவறவிட்டிருந்தார். அதற்கு அடுத்தபடியாக டேரில் மிட்சல் 32 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அசத்திருந்தார். துபே 20 பந்துகளில் 39 ரன்களை அடித்து அணிக்கு நல்ல இலக்கை சேர்க்க உதவி இருந்தார். ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக பந்துவீசவில்லை என்று சொல்லலாம். அதில் புவனேஸ்வர் குமார், நடராஜ் மற்றும் உனாட்கட் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார்கள்.
அதன் பின் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் வீரர்கள் 18.5 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது எனவே ஹைதராபாத் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இதில் அதிகபட்சமாக மார்க்ரம் 32 ரன்களையும் க்ளாசென் 20 ரன்களிலும் சமாத் 19 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளையும் பதிரான மற்றும் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டையும் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் தலாஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே சென்னை அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது.