ருதுராஜ் கெய்க்வாட்டின் மட்டமான கேப்டன்சி. பஞ்சாப் அணியிடம் போராடாமலே தோல்வியை தழுவிய சென்னை அணி

உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஏல் 2024 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இந்த இரு அணிகளும் ப

By ·

உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஏல் 2024 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இந்த இரு அணிகளும் ப்ளே ஆப் ரேசில் தொடர்ந்து இருக்க இந்திய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இருந்தார். அது அவர்களுக்கு சிறப்பாக அமைந்தது

சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பி வந்தனர். அந்த வகை சொதப்பலுக்கு காரணம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான். பேட்ஸ்மேன்களின் வரிசைகளை மாற்றி மாற்றி அனுப்பி அணியை குழப்பி சிக்கலில் தள்ளிவிட்டார். இருப்பினும் அவர் நிதானமாக விளையாடி அணிக்கு சற்று அணிக்கு ரன்களை குவித்து வந்தார். அவரும் சற்று பொறுமையாக தான் ரன்களை சேர்த்து வந்தார். சென்னை அணியின் தோல்விக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

சென்னை அணி கடைசிவரை போராடி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டும் தான் அடித்து இருந்தது. இதில் அதிக பட்சமாக கேப்டன் ருதுராஜ் 62 ரன்னும் ரகானே 29 ரன்களையும் சமீர் ரிஸ்வி 21 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்த அளவிற்கு குறைவான ரன்களை அடிக்க முக்கிய காரணம் கேப்டன் தான். ஆரம்பத்தில் ரகானே வெளியேறிய உடன் மொயின் அலி அல்லது மிட்சலை கொண்டு வந்து இருக்க வேண்டும் அதற்க்கு பதிலாக துபேவை கொண்டு வந்தார் அவரும் ரன் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின்னாவது அலி அல்லது மிட்ச்சலை கொண்டு வந்து இருக்க வேண்டும் ஆனால் அதுவும் செய்யவில்லை.

அதன் பின் ரிஸ்வியும் சொதப்பலான பேட்டிங்கால் 21 ரன்னிலும் வெளியேறினார். நல்ல வலுமையான பேட்டிங் ஆர்டரை கொண்ட சென்னை அணியின் பேட்டிங் வரிசையை கேப்டன் பொறுப்பு இல்லாமல் இது போல் குழப்பி அணியை தோல்வி தழுவ வைத்தார். பஞ்சாப் அணி சார்பில் ராகுல் சஹார் மற்றும் ஹர்மீத் ப்ரார் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரபாடா மற்றும் அர்ஷ்டீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

163 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 17.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிக பட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 46 ரன்களையும் ரூசோ 43 ரன்களையும் அடித்து இருந்தனர். அதன் மூலமாகவே பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இந்த வெற்றியில் புள்ளி பட்டியலில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை இருப்பினும் சென்னை அணி இன்று இரவு செய்த தவறுகளை அடுத்த போட்டியில் திருத்திக்கொண்டு அடுத்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை