சேப்பாக்கத்தில் ராஜா என நிருபித்த சென்னை அணி. சென்னை அணியை சமாளிக்க முடியாமல் திணறியே குஜராத் அணி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. சென்னை அணி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. சென்னை அணி இதற்க்கு முன்பாக முதல் போட்டியில் பெங்களூரு அணியை எளிதாக வெற்றி பெற்றும் அதேபோல குஜராத் அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்றும் இந்த போட்டியில் களம் கண்டனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார். ஆனால் அது அவர் நினைத்ததற்கு எதிராகவே அமைந்தது.குஜராத் அணியின் பந்த்துவீசை எளிதாகவே சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். அதன்படி பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரை குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர்.
That urge to say "Ek tha jo wicket ke peeche se match palat deta tha".#Dhonipic.twitter.com/5RT1mEtlqN
— Himanshu Pareek (@Sports_Himanshu) March 26, 2024
அதிரடி ஆட்டுக்காரர் ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்களை அடித்து அரை சதத்தை இழந்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்பு வந்த நின்று நிதானமாக ரஹானே 12 ரன்களில் அவர் சாய் கிஷோர் இடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்பு நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளின் 46 ரன்களில் அரை சதத்தை இழந்து வெளியேறினார்.
அதன் பின்பு வந்த அதன்பின் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சுபம் துபே 23 பந்துகளில் 51 ரன்களை அடித்து குஜராத் அணியை சிதற அடித்து இருந்தார். அதில் ஐந்து சிக்சர்களும் இரண்டு பவுண்டரின் அடங்கும். அதன் பின்பு ஐபிஎல் புதிதாக களம் இறங்கிய சமீர் ரிஸ்வி t20 பந்துவீச்சாளர்களில் முதல்தரத்தில் இருக்கும் ராஷித் கானை வந்த உடனே முதல் பந்திலே சிக்ஸர் அடித்து தனது ipl-ல் ரன் கணக்கு தொடங்கினார்.
அதன் பின் பேட்டிங் செய்த குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதில் குஜராத் அணி சார்பில் சாய் சுதர்ஷன் 37 ரன்களும் மில்லர் 21 ரன்களும் சாஹா 21 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் சஹார் தேஷ்பாண்டே மற்றும் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்சல் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.