ஆடுகளத்திற்கும் அணிக்கும் அந்த சமந்தமும் கிடையாது. ஆடுகளம் இவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை – பயிற்சியாளர் பாராஸ் மாம்ப்ரே
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது. அது ஆரம்பத்தில் அவர்களுக்கு சொதப்பலாக இருந்தாலும் அதன் பின் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது. மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல் பட்டு இருந்தனர். ஜடேஜா 4 விக்கெட்டையும் இதில் குறிப்பாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ்2 விக்கெட்டுகளையும் அஷ்வின் 83 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
சுப்மன் கில் 38 ரன்களிலும் ரஜத் படிதார் 17 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மற்று ஒரு பக்கம் நின்று நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து இருந்தார். அதன் மூலம் அவர் இந்திய அணிக்காக ஒரேதொடரில் 600 ரன்களை கடந்த இடது கை பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அவர் படைத்து இருந்தார். மேலும் இந்திய அணிக்காக ஒரு தொடரில் 600 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 3 இடத்தில் இருந்து வருகிறார். ஜெய்ஸ்வால் 73 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் ஜெய்ஸ்வால் மட்டுமே அரை சதத்தை பதிவு செய்து இருந்தார். “இன்றைய நாள் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் பாராஸ் மாம்ப்ரே கூறுகையில், “இப்போதைக்கு, நான் அதை ஒரு ரேங்க்-டர்னர் என்று அழைக்கமாட்டேன்; பவுன்ஸ் குறைவாக உள்ளது, பேட்டிங்கை சற்று சவாலாக ஆக்குகிறது. பல பந்துகள் கூர்மையாக சுழலும் அல்லது விளையாட முடியாதவை என்று நான் நினைக்கவில்லை.
ஆடுகளத்தை தயாரிப்பதில் அணி நிர்வாகத்திற்கு எந்த ஈடுபாடும் இல்லை. அது உள்ளூர் சங்கத்தின் தனிச்சிறப்பு மட்டுமே என்பதை எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, மைதானங்கள் என்பது நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. இங்கு விக்கெட் விளையாடிய விதம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்து வருகிறது, ஒரு தரவரிசையை மாற்றியமைப்பதில்லை. அதுதான் மண்ணின் இயல்பு. ரேங்க்-டர்னரில் நாங்கள் விளையாட வேண்டும் என்று எங்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை. வெளிப்படையாக, ராஜ்கோட்டில் நாங்கள் பார்த்ததை விட இங்குள்ள மண் வேறுபட்டது. என்றும் அவர் கூறி இருந்தார்.