சர்ச்சையான ஸ்டோனிஸ் விக்கெட். விதியின் படி இது சரியா? விதிகள் கூறுவது இது தானா?
உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின்
உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் இன்று சவுத் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியில் வென்று தீர வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. அதில் டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களான டீ காக் மற்றும் பவுமா களம் இறங்கினார்கள். இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா பந்து சமாளித்து தென்னாப்பிரிக்கா அணிக்கு ரன்களை குவித்து வந்தனர். பவுமா 35 ரன்களில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வான் டெர் டுசென் நிதானமாக விளையாட 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேற அதன் பின்பு டீகாக் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.
ஆனால் அவரும் சதத்தை பூர்த்தி செய்த கையோடு நிலைத்து நின்று விளையாடாமல் 109 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த மார்க்கம் 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேற கிளசென் 29 ரன்களிலும் ஜான்சன் 26 ரன்களில் அவுட்டாகி வெளியேற அதன் பின் நிர்ணயிக்க 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் களை இழந்து 311 ரன்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக டீகாக் 109 ரன்களை அடித்து இருந்தார். 312 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பம் பெருத்த அடியாக இருந்தது.
மார்ஷ் 7 ரன்கள் அவுட் ஆகி வெளியேற ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே சோனையாக மாறியது. அவர் சென்ற வேகத்திலேயே அடுத்த ஓவரில் டேவிட் வார்னரும் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். நிதானமாக விளையாட நினைத்து விளையாடி வாழ்ந்த ஸ்மித் 19 ரன்களில் அவுட் ஆகி வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதன் பின் வந்த ஜாஸ் இங்லீஸ் ரன்களை குவிப்பார் என்று எண்ணிய நிலையில் வேகத்திலேயே ஜாஸ் இங்கிலீஷ் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 65 என இருந்த நிலையில் மேக்ஸ்வெல் 3 ரன்னிலே வெளியேறினர். ஸ்டாய்னிஸ் 5 ரன்னிலே வெளியேற அணியின் தோல்வி கிட்ட தட்ட உறுதியாகி விட்டது. ஸ்டாய்னிஸ் விக்கெட் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
Marcus Stoinis was unhappy with the decision as he felt his hand was off the bat when the ball made contact. pic.twitter.com/6tN2HgnqXA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 12, 2023
விதிகள் கூறுவது:
17.2 வது ஓவரை வீசிய ராபாடா ஸ்டாய்னிஸ் தனது விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. விதிகள் படி பந்தானது க்ளோஸில் படும்போது அந்த க்ளோசானது பேட்டை பிடித்து இருக்க வேண்டும் ஆனால் இந்த விக்கெட்டில் பந்தானது க்ளோஸில் படும்போது அந்த க்ளோஸ் (இடது கை) பேட்டை பிடிக்கவில்லை தனியாகத்தான் இருக்கிறது. எனவே இது நாட் அவுட் ஆகும். ஆனால் இதை மூன்றாவது நடுவர் அவுட் என்று அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.