லக்னோ மைதானத்தில் கோலியிடம் கம்பீர் கூறியது இதுதான் – முழு விவரம் இதோ.
விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்த நிலையில் அது வாக்குவாதமாக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்
விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்த நிலையில் அது வாக்குவாதமாக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அணி தன்னுடைய மைதானத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு பிறகுதான் பெரிய சம்பவம் ஓன்று நடந்தது. இந்நிலையில் தான் 17 வது ஓவரின் போது லக்னோ பேட்ஸ்மேன் நவின் உல் ஹக் மற்றும் விராட் கோலிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது அம்பயர்களும் சக வீரர்களும் வந்து பெரிய வாக்குவாதம் ஏற்படாத வாறு இருவரையும் பிரித்து விட்டனர்.
அதற்கு பிறகு தோல்வியடைந்த லக்னோ அணியும் ஆர்சியி அணியின் பரஸ்பாரமாக கைகொடுப்பதற்கு சென்றது. ஆனால் அங்கேயும் விராட் கோலி மற்றும் நவின் உல் ஹக் வாக்குவாதம் நடந்தது. அப்போது நவின் உல் ஹக் விராட் கோலியை பிடிக்க முயன்றார். இந்த சம்பவம் ஓய்ந்த பிறகு லக்னோ அணியின் பேட்ஸ்மேன் கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே கெளதம் கம்பீர் கைல் மேயர்ஸின் கைகளை பிடித்து கூட்டி சென்றார்.
கம்பீருடன் ஏற்பட்ட வாக்குவாதம் :
அதற்கு பிறகு விராட் கோலிக்கும் கம்பீருக்கும் வாங்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த அனைவரும் அங்கு கூட கோலி மற்றும் கம்பீருக்கு இடையே வாங்குவாதம் முற்றுகையில் சக வீரர்கள் இந்த பிரச்னை மேலும் பெரிதாக வண்ணம் இருவரையும் பிரித்து அழைத்து சென்றனர்.இந்நிலையில் தான் அங்கு கோலியும் கம்பீரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது கோலி கம்பீர் மோதலின் போது கம்பீர் “நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு விராட் கோலி : நான் உங்களிடம் எதுவும் சொல்லாத போது நீங்கள் ஏன் இங்கு இடையில் வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த கம்பீர் : நீங்கள் என் வீரரை துஷ்பிரயோகம் செய்தீர்கள், அது எனது குடும்பத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்றது என்று கூறியுள்ளார்.
அதற்கு விராட் : அப்படியென்றால் உங்களுடைய குடும்பத்தை நீங்களே கவனித்து கொள்ளுங்கள் என்று சொன்னதும்.
உடனே கம்பீர் : எனவே இப்போது நான் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். என்று பேசியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு ஐபிஎல் நிர்வாகம் இவர்கள் இருவருக்கும் 100 சதவிகிதம் சம்பளத்தில் இருந்து அபராதமாக போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் அவர்களுக்கும் 50 சதவிகிதம் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டது. அதனையடுத்து விராட் மற்றும் நவீன் உல் தங்களது ஷோசியல் மீடியாவில் சில பதிவுகளை இட்டனர். அவை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.