“கிரிக்கெட் என்பது மோசமான விஷயம் கிடையாது” உலக கோப்பையில் இருந்து வெளியேறிய பிறகு உருக்கமாக பேசிய ஜேசன் ஹோல்டர்.

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில் தற்போது உலக கோப்பை தகுதி சுற்றானது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வர

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில் தற்போது உலக கோப்பை தகுதி சுற்றானது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே மோசமாக செயல்பட்டு வந்த வேஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி அடைந்தே ஆகவேண்டிய காட்டாயத்தில் சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பாட்டை ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 43.5 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 181 ரன்கள் மட்டுமே கொடுத்தது. இதனையடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதனால் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் வரலாற்றில் முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஜேசன் ஹோல்டர் பேட்டி :

இந்த நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் இந்த தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “கிரிக்கெட் என்பது தனிப்பட்ட விஷயமோ அல்லது மோசமானது கிடையாது. நான் அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாட வேண்டிய விளையாடி எப்படி முன்னேறுவது என்பதை பற்றி யோசிக்க வேண்டும். கடந்த ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டி எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அந்த முக்கியமான போட்டியில் எங்களினால் வெற்றிபெற முடியவில்லை. நாங்கள் வரும் உலக கோப்பைக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது.

மேலும் இந்த போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தவும் எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அதனை நாங்கள் சரியாக செய்யவில்லை. இந்த உலக கோப்பையில் நாங்கள் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காத போதிலும் நேர்மறையான விஷியங்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்துள்ளது. நான் அணியில் இருந்த வரையில் இது நாங்கள் எடுத்த மிகவும் குறைவான புள்ளி என்று நினைக்கிறேன்.

நிகோலஸ் பூரான் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் இந்த தொடரில் முழுவதும் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. அதோடு சில இளம் வீரர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எங்களுடைய அணியில் எடுக்கப்படும் குறுகிய கால நடபடிக்கைகள் பயணமளிக்காது. அதோ போன்று அணியில் உள்ள குறைபாடுகளை விரைவாக சரி செய்வதும் ஒரு கடினமான விஷயம். அதற்கு சில காலம் தேவை.

நாங்கள் இப்போது தோற்றிருந்தாலும் இன்னும் வரும் ஓரிரு ஆண்டுகளில் கடினமாக உழைத்து சிறந்த பலனை அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார் ஹோல்டர். குறிப்பிடத்தக்க வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது சமீப காலமாக மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு லாரா ஓய்வு பெற்றதில் இருந்து குறிப்பிடதக்க வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஒருநாள் போட்டிகளில் பெரிதாக வெற்றியை பதிவு செய்யவில்லை என்பது சோகமான விஷயமே.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை