சந்திராயன் 3 வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு ISRO விற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் – யார் யார் தெரியுமா?
இந்தியா தற்போது பல துறைகளில் தற்போது சாதித்து வருகிறது, அந்த வகையில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கான ஒரு முக்கியமான சாதனைகளாக நிலாவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ( ISRO ) இன்று ஜூலை 14 அன்று வெற்றிகரமாக சந்திரயன் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இது நாட்ட
இந்தியா தற்போது பல துறைகளில் தற்போது சாதித்து வருகிறது, அந்த வகையில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கான ஒரு முக்கியமான சாதனைகளாக நிலாவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ( ISRO ) இன்று ஜூலை 14 அன்று வெற்றிகரமாக சந்திரயன் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் என்றே சொல்ல்லாம்.
நமது நாட்டில் நாட்டில் தயாரிக்கப்பட்ட உந்துவிசை தொகுதி, லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய செயற்கைக்கோளை இந்திய ஏவியுள்ள நிலையில் இது இந்தியாவிற்கு இன்டர் பிளேனிட்டரி ஆராய்ச்சியில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சந்திராயன் 3 விண்கல்லானனது ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து Mk III LV3 செயற்கைக்கோள் மூலம் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விண்கலனானது வரும் ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24 ஆம் தேதிகளில் நிலாவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரியன் -3 இல் ஒரு குறிப்பிடத்தக்க கருவியாக ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹாப்பிடபில் பிளானட் என்ற ( SHAPE ) இடம்பெறுள்ளது. இது சந்திர சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் துருவமுனைப்பு அளவீடுகளை பற்றிய சோதனைகளை நடத்தும்.
இந்தே போன்றது பல தொழில் நுட்பங்களுடன் சந்திராயன் 3 ஏவப்பட்டுள்ளது. மேலும் இதில் இருக்கும் ரோவரில் தரையிறங்கும் தளத்தின் அருகிலுள்ள அடிப்படை அமைப்பைப் பெறுவதற்காக ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் ( APXS ) மற்றும் லேசர் தூண்டப்பட்ட முறிவு ஸ்பெக்ட்ரோஸ்கோப் ( LIBS ).போன்ற தொழில் நுட்பங்கள் இருக்கின்றது.சந்திரயன் -3 இன் வெற்றிகரமான ஏவப்பட்ட நிலையில் தான் கிரிக்கெட் உட்பட பல்வேறு விண்வெளி ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகளை ISRO வானது பெற்றுள்ளது.
பாராட்டும் கிரிக்கெட் வீரர்கள் :
குறிப்பாக சாச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக்,ஷிகர் தவன், மித்தலி ராஜ், VVS லட்சுமண் மற்றும் பலர் ஐ.எஸ்.ஆர்.ஓவைப் பாராட்டினர். இந்தியாவை விண்வெளி ஆராய்ச்சி துறையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் ISROவை உலகமே தற்போது பாராட்டி வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் இந்தியா செய்வாய் கிரகத்திற்கு Gravity என்ற படத்தின் செலவை விடவும் குறைவான செலவில் மங்கள்யான் செயற்கை கோலை ஏவியதும் குறிப்பிடதக்கது.