சென்னை vs மும்பை போட்டியில் நிறைவேறிய CSK சிறுவனின் ஆசை – வைரலாகும் வீடியோ இதோ.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் சிஎஸ்கே சிறுவன் ஒருவர் ரோஹித் சர்மா பற்றி கூறிய நிலையில் அது தற்போது நடந்துள்ளது. ஐபிஎல் 2023 இன் 49வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே M. சிதம்பரத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியி

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் சிஎஸ்கே சிறுவன் ஒருவர் ரோஹித் சர்மா பற்றி கூறிய நிலையில் அது தற்போது நடந்துள்ளது. ஐபிஎல் 2023 இன் 49வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே M. சிதம்பரத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணி மிக மோசமான தொடக்கமே கிடைத்து.

ஐபிஎல் 2023ல் முதல் முறையாக ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்வதற்கு பதிலாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் ஆனால் மீண்டும் எந்த ரன்களும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார் ரோஹித் சர்மா. அதாவது இன்று சென்னைக்கு எதிரான எம்.சிதம்பரத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவதாக களமிறங்கினார்.

அப்போது 2வது ஓவரில் தீபக் சஹர் பந்துவீச வந்தார். அப்போது 2வது ஓவரின் வது பந்தில் ரன் தூவும் எடுக்காமல 3 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 0 ரன்களில் வெளியேறி டக் அவுட்டுக்கு திரும்பினார். இதற்கு முன்பும் ஐபிஎல்லில் மொத்தம் 15 முறை ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா இன்று மீண்டும் 0 ரன்னில் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் ஆனவர் என்ற தேவையில்லாத சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் ஒருவர் ரோஹித் ஷர்மா டக் ஆனால் நன்றாக இருக்கும் என் கூறிய இந்நிலையில் அதே போல ரோஹித் ஷர்மா டக் அவுட்டாகி சென்னை அணியும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் அந்த சிறுவன் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு ஐபிஎல்லில் கேப்டனாக 11 முறை டக் அவுட்டானவர் என்ற மோசமான சாதனையை படித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

மேலும் போட்டியை பொறுத்தவரையில் முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலே பெரிய அடியாக ரோஹித் ஷர்மா வெளியேறினார். அதற்கு பிறகு வந்த வீரர்களும் சரியாக ஆடாத நிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை விளாசியது. 140 ரன்கள் எடுத்தால் என்று களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள் இறுதியில் சென்னை அணி 14 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றியை பதிவு செய்தது. அதோடு 13 வருடங்கள் கழித்து சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற்றவுள்ளதும் குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை