வீடியோ : தோனி 2024 ஐபிஎல்லில் விளையாடுவாரா? பெரிய அப்டேட் கொடுத்த CSK அணியின் CEO காசி விஸ்வநாதன்.
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனின் கடைசி ஆட்டத்தை தங்கள் சொந்த மைதானமான எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடியது. அதே சமயம் இந்த கடைசி போட்டியில் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதனும் உடனிருந்தார். இருப்பினும் இந்த மைதானத்தில் சென்னை அணி இன்னும் அதிக போட்டிகளில
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனின் கடைசி ஆட்டத்தை தங்கள் சொந்த மைதானமான எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடியது. அதே சமயம் இந்த கடைசி போட்டியில் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதனும் உடனிருந்தார். இருப்பினும் இந்த மைதானத்தில் சென்னை அணி இன்னும் அதிக போட்டிகளில் விளையாட முடியும், ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட அந்த அணி முதலில் பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும்.
அதே சமயம் ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் சென்னை அணிக்கு விளையாடுவாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் போட்டிக்குப் பிறகு அனைவரின் மனதிலும் எழுந்தது. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனியின் ஓய்வு பெறுவது குறித்து எந்த பதிலும் இன்னமும் இல்லை. ஆனாலும் தோனினியுடன் பழகியவர்கள் பலர் தோனி இன்னும் சில ஐபிஎல் தொடர்கள் விளையாடுவார் என்று கூறினார்கள்.
மேலும் தோனியின் நெருங்கிய நண்பரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா கூட தோனி இன்னமும் ஒரு வருடம் நான் விளையாடுவேன் என்று கூறியதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விசுவநாதன் தோனி ஓய்வு குறித்து பெரும் அறிவிப்பு ஒன்றை கூறியிருக்கிறார்.
A night of gratitude and infinite #Yellove #YellorukkumThanks #WhistlePodu 🦁💛 pic.twitter.com/1FTdgN7Z2c
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
அதில் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி பேசுகையில் “எம்எஸ் தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது போல தொடர்ந்து அடுத்த வருடமும் அதிகமான ரசிங்கர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார் காசி விஸ்வநாதன்.
அதாவது 2024 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகம் விரும்புவதாக விஸ்வநாதனின் பேச்சிலிருந்து தெரிகிறது. இந்நிலையில் அந்த வீடியோவில் மற்ற சென்னை அணியின் வீரர்களும் CSK ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
பிளே ஆஃப் செல்ல செய்ய வேண்டியது :
சென்னை அணி ஐபிஎல் 2023 தொடரில் இதுவரையில் 13 போட்டிகளில் விளையாடி உள்ளது இதில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் எடுத்து 2வது இடத்தில் இருக்கிறது. இருந்த போதிலும் மும்பை, லக்னோ, ராஜஸ்தான், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் இருப்பதினால் பிளே ஆஃப் செல்வதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதே நேரத்தில் ஒருவேளை சென்னை அணி வரும் 20 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தினால் கண்டிப்பாக பிளே ஆஃப் செல்லும்.