CSK அணியில் அவருடைய ஆட்டம் முற்றிலுமாக மாறிவிட்டது, ஆனால் அந்த திறமை அவரிடம் ஏற்கனவே இருந்தது – டிஜே பிராவோ.
ஐபிஎல் 2023 கடந்த மாதம் தொடங்கி தற்போது மைய கட்டத்தை எட்டியுள்ளது. பல அணிகள் 7 போட்டிகள் வரையில் விளையாடி தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையுமே சரியாக தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கத்தில் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகிய போதிலும
ஐபிஎல் 2023 கடந்த மாதம் தொடங்கி தற்போது மைய கட்டத்தை எட்டியுள்ளது. பல அணிகள் 7 போட்டிகள் வரையில் விளையாடி தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையுமே சரியாக தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கத்தில் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகிய போதிலும் இருக்கின்றன வீரர்களை சரியாக பயன்படுத்தி இந்த செய்தியை எழுதும் வரையில் ஐபிஎல் 2023 சீசனில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
தொடக்கத்தில் CSK அணியின் பந்துவீச்சு மோசமாக இருக்கிறது என்ற நிலையில் தற்போது பலம் வாய்த்த பந்துவீச்சாளர்களை தயார் படுத்திவருகிறது csk. அதே போல பேட்டிங்கிலும் பல அற்புதத்தை காட்டிவருகிறது. பேட்ஸ்மேன்களும் தங்களுடைய திறமையை காட்டி பிரமாதமாக விளையாடி வருகின்றனர். அவர்களில் குறிப்பாக ரஹானேயை சொல்லலாம். கொல்கத்தா அணியால் நிராகரிக்கப்பட்ட ரஹானேவை சென்னை அவருடைய அடிப்படை விளையான 50 லட்சம் ரூபாயில் வாங்கியது.
ரஹானே 2.0 :
ஐபிஎல் 2023 தொடக்கத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரஹானே அதிரடியாக ஆட ஆரம்பித்தார். மூன்றாவதாக களமிறங்கும் ரஹானே தன்னுடைய பேட்டிங்கினாள் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். கடைசியாக நடந்த போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களை அசால்டாக அடித்தார். அதோடு அந்த போட்டியை பார்த்த ரசிகர்கள் அப்படியொரு ரஹானேவை தாங்கள் இதுவரையில் பார்த்ததில்லை என்று சோசியல் மீடியாவில் டிரண்ட் செய்தனர்.
ரஹானே குறித்து பிராவோ :
அப்படியொரு நிலையில் தான் ரஹானே பற்றி CSK பயிற்சியாளர் பிராவோ சமிபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் ” இந்தியாவில் இருக்கும் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களில் அஜிங்க்யா ரஹானேவும் ஒருவர். ஆரம்ப காலத்தில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போதில் இருந்து நான் அவருடைய தீவிர ரசிகன். தற்போது அவர் எங்கள் அணியில் இருப்பதில் நாங்கள் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில் அவரது ஆட்டம் முற்றிலுமாக மாறிவிட்டது. ஆனால் அந்த திறமை அவரிடம் எப்போதுமே இருந்தது என்று கூறினார் பிராவோ.
மேலும் பேசிய அவர் CSK அணி அனைவரையுமே சுதந்திரமாக விளையாட அனுமதிக்கும். ஏனென்றால் நாங்கள் வீரர்கள் மீது எந்த வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. இந்தியாவின் சிறந்த திறமைசாலிகளில் தானும் ஒருவர் என்பதை ரஹானே நிரூபித்துள்ளார். அவர் இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணிக்காகவும், சிஎஸ்கேக்காகவும் அவர் இன்னும் பல ஆச்சரியங்களை வழங்க வேண்டும் என்றார் பிராவோ.
இன்றய போட்டி :
இந்நிலையில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரஹானே வரும் இந்திய டெஸ்ட் உலகக்கோப்யிலும் இடம்பெற்று விளையாட போகிறார். ஆனால அவர் யாருக்கு பதிலாக களமிறக்கப்படுவார் என்ற கேள்வி இருக்கிறது. இருந்த போதிலும் ரஹானே ரசிகர்களுக்கு இது ஒரு அற்புதமாக செய்தி. மேலும் இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்த்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்ள இருக்கிறது. ராஜஸ்தானிடம் ஏற்கனவே ஒருமுறை தோல்வியடையாந்த நிலையில் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை இன்று களமிறங்குகிறது.