VIP-சீட் கலாசாரத்தை நிறுத்துங்கள்! சேப்பாக்கத்தில் இருக்கைகள் கிடைக்காததினால் கொதித்தெழுந்த ரசிகர்கள்.

ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸின் தங்களுடைய இரண்டாவது போட்டியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் எதிர்கொண்டது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30மணி அளவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்

By ·

ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸின் தங்களுடைய இரண்டாவது போட்டியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் எதிர்கொண்டது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30மணி அளவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை நன்றாகவே அமைந்தது.

சென்னை மைதானத்தில் முதல் முறையாக களம் கண்ட ருதுராஜ் அருமையான ஆட்டத்தின் மூலம் சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அதன் பின் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி வந்த முதல் பந்திலே சிக்ஸ்சரை தெறிக்க விட்டார்.அவர் 3 பந்துகளில் 12 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து 217 ரன்களை குவித்தது

இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தொடக்கத்தில் திணறினாலும் அதற்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை காட்டி நல்ல ரன்கள் குவித்தனர். கிட்டத்தட்ட வெற்றியடையும் அளவிற்கு வந்து விட்டனர். ஆனால் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் தோனி அடித்த அந்த 3 சிக்ஸர்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரல் ஆகியது.

1426 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் நடப்பதினால் சென்னை அணியை காண வந்த ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு சீட்டுகள் கிடைக்காம் இருந்தனர். சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் காலி இருக்கைகள் இருந்தன, அவை VIP களுக்கு அமைக்கப்பட்ட இருக்கைகளாகும். இந்த இருக்கைகளுக்கு கவுன்ட்டர் மூலமாகவும் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு ஏராளமான ரசிகர்கள் முயன்றபோதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

விஐபிகளுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு கொடுக்க ஐபிஎல் நிர்வாகம் தடுப்பது குறித்தும், கவுண்டரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் கொடுக்காமல் ரசிகர்களை விட்டுவிடுவது குறித்தும் சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வைரலானது. சென்னை ரசிகர்களுடன் பகாசுரன் இயக்குனர் மோகன் ஜி, திரைப்பட விமர்சகர் பிரசாந்த் என பல சினிமா பிரபலங்கள் சென்னை மைதானத்தில் இருந்த காலி இடங்கள் குறித்து கடுமையாக விமரிசித்து பேசியிருந்தனர். அவை தான் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை